பாண்டிராஜை வெளுத்து வாங்கிய டி.ஆர்!

Must read

12-1399872064-simbu-nayan-love-01

சிம்புவின் வாலு படம் மூன்று வருட வனவாசத்துக்குப் பிறகு ரீலீஸாகியிருக்கிறது.  இதையடுத்து உற்சாமகான சிம்பு, கையிலிருக்கும் படங்களையும் புதுப்படங்களையும் (வழக்கத்துக்கு மாறாக!) சுறுசுறுப்பாக முடித்துவிட தி்ட்டமிட்டிருக்கிறார்.

அந்த வரிசையில்,  பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுட ன் நடிக்கும் ‘இது நம்ம ஆளு’. படத்தையும் நடித்துக்கொடுக்க  நினைத்தார். ஏற்கெனவே இவர் கால்ஷீட் சொதப்பியதால் படம் தடைபட்டது.   ஆகவே, இந்த படத்தை பாதியில் பாதியில் விட்டுவிட்டு சூர்யா தயாரிப்பில் பசங்க 2 படத்தை எடுத்து முடித்து விட்டார் பாண்டிராஜ்.   தற்போது விஷால் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், சிம்பு, “இ.ந.ஆ.” படத்தை முடித்துவிடலாம் என்று பாண்டிராஜிடம் கேட்க ஆரம்பத்தில் தயங்கிய பாண்டிராஜ் பிறகு ஒப்புக்கொண்டார். ஆனால் உடன் நடிக்க வேண்டிய நயனோ கால்ஷீட் தர மறுத்துவிட்டார்.

இதனால் ஆவேசமான சிம்பு,  தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் செய்ய…  நடிகர் சங்கம் இதுகுறித்து நயனிடம் விளக்கம் கேட்டது. நயனோ,  “நான் கொடுத்த தேதிகளை எல்லாம் வீணாக்கி விட்டார்கள். இப்போது வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டேன். ஆகவே என்னால்  அந்தப் படத்தில் நடிக்க முடியாது. வேண்டுமானால்   நான் வாங்கிய சம்பளத்தைத் தந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டார்.

ஆகவே நடிகர்சங்கம், இயக்குநர் பாண்டிராஜிடம் விசாரித்திருக்கிறது. அவரோ, “சிம்பு மேல்தான் தவறு. அவர்தான் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வராமல் சொதப்பினார்” என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து பாண்டிராஜூக்கு போன் போட்ட சிம்புவின் தந்த டி.ஆர். எதுகை மோனையில் வெளுத்து வாங்கிவிட்டாராம்.

More articles

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article