IMG_20160128_123044
அமெரிக்காவில் மத்த ஏரியாக்கள் எப்படின்னு தெரியலை. ஆனா… சவுத் ஃப்ளோரிடாவில் …, நாய் கூட மதிக்காத ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடை எதுன்னு கேட்டீங்கன்னா..…, அது நம்மூரில் கொடி கட்டிப் பறப்பதா நான் கேள்விப்பட்ட KFC. அந்தக் கடைகளுக்குள்ளே போகும் ஆட்களைப் பார்த்தாலே… அதன் தரம் தெரிஞ்சிடும். அதுக்காக.. ரொம்ப டீஸண்டா தெரியும் மத்தக் கடைகள் எல்லாம்… நம்ம உணவை ISI முத்திரையோடவா தயாரிக்கறாங்கன்னு நினைக்கறீங்க?
அமெரிக்காவில் இருந்து ஒரு கம்பெனி நம்மூரில் வந்து, பர்கர் மாமா, பர்கர் மச்சான், மஹாராஜா பேரன் -னு பெயரை மாத்திகிட்டு கடையை விரிச்சி கல்லா கட்டிகிட்டு இருக்காங்க. ஆனா… அந்தக் கருமங்களை இங்கிருந்து ஏன் துரத்த முயற்சி பண்ணிகிட்டு இருக்காங்கன்னு அடுத்த முறை.. அந்த சுத்த பத்தமான வெஜ்/நான் வெஜ் பர்கர் கடிக்கும் போது கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க.
, இதைப் படிப்பதில் கொஞ்சம் பேராவது… Super Size Me டாகுமெண்ட்ரியை பார்த்தோ/கேள்விப் பட்டோ இருப்பீங்க. ஒரு ஆரோக்கியமான மனிதன், தினம் மூன்று வேளை-ன்னு ஒரேயொரு மாதத்திற்கு மட்டும் McDonald’s -ல் இருந்து சாப்பிட.. முதல் 5-10 நாளிலேயே… அவரை டெஸ்ட் செய்யும் டாக்டர்கள் எல்லாம் அரண்டு போவது போல, அவர் உடலில் மாற்றங்கள் ஏற்பட…, அதற்கடுத்த 10 நாளில்… அத்தனை டாக்டர்களும்.. அவரை கெஞ்சவே ஆரம்பிச்சிடுவாங்க. அந்த முப்பது நாட்களில்.. Morgan Spurlock கிட்டத்தட்ட அபாய எல்லையை எல்லாம் தாண்டுமளவுக்கு, தன் உடலில் மாற்றத்தைப் பார்ப்பார். அவர் செக்ஸ் வாழ்க்கை உட்பட!!! (இதைச் சொன்னாதானே… பயப்படுவீங்க). இப்ப 30 Days -ன்னு சொல்லி ஒரு ரியாலிடி ஷோ நடத்தும் அளவுக்கு, இந்த டாகுமெண்ட்ரி இவரை பிரபலமாக்கியது.
ஆனாலும்.. எந்த மனிதனும்.. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு.. McDonald’s-ல் சாப்பிட மாட்டான் என்பதால்…. இது அத்தனை பாதிப்பை எனக்கு தரலை. ஒரு வருடம் முன்னாடி வரைக்கும், நானும்.. தினசரி ஒருதரம்-ன்னு மெக்டொனாட்ஸில் சாப்பிட்டுக்கிட்டுதான் இருந்தேன். அதுக்கே உடம்பில் ஏகப்பட்ட மாற்றங்கள். அப்புறம் எப்பவாவது ஒரு தரம்னு குறைஞ்சது. இப்ப நாலு மாசமா… எத்தனைப் பசின்னாலும்… அந்த ஏரியா பக்கமே போறதில்லை.
The Cove டாகுமெண்ட்ரி.. என்னை ஒரு போன் மட்டும்தான் செய்ய விட்டது. Food, Inc டாகுமெண்ட்ரி…கொஞ்ச நாளா என் உணவு முறையையே மாற்றியிருக்கு.அல்லது வாழ்க்கையையே……..மிடில் ஈஸ்ட் ராஜப் பரம்பரையில் ஆரம்பிச்சி… என் மூணு வயசு குழந்தை வரைக்கும்…. இந்த டேஸ்டிற்கு அடிமையாதான் இருக்கோம். ஆனா… சாப்பிட்டது மூளையை மந்தமாக்க…. ஒன்னேயொன்னை மட்டும் மறந்துட்டோம்!!!!!!
இந்தியாவில் எந்த மூலையில் போய்.. McDonald’s / Burger King பர்கரை கடிச்சாலும்.. ஒரே டேஸ்ட்தான். நம் நாட்டை விட மூணு மடங்கு பெரிய நாடு… மூலைக்கு மூலை.. இந்த புற்றீசல்கள் இருக்கும் அமெரிக்காவிலும்.. இதே போல.. ‘ஒரே தேசம்… ஒரே டேஸ்ட்’ -தான்.
01. இந்த ஒரே டேஸ்ட் எப்படி… ஒட்டு மொத்த நாட்டிற்கும் கிடைக்குது?
02. ஒரு பாட்டில் தண்ணியை விட, அதை விட பெரிய பாட்டில் சோடா எப்படி கம்மியான விலைக்கு கிடைக்குது?
03. முட்டைக் கோஸ், உருளைக் கிழங்கு எல்லாத்தையும் ஒரு கிலோ வாங்குற காசை விட, கம்மியான காசில்.. எப்படி… உங்களால் McDonald’s மாதிரியான கடைகளில், குடும்பத்துக்கேசாப்பாட்டை வாங்க முடியுது?
04. நாம மாடு சாப்புடுறோம், கோழி சாப்பிடுறோம்! சரி..!!! அந்த மாடும், கோழியும் என்ன சாப்பிடுது?
05. ஒவ்வொரு முறையும் என் மகளும், கிரியும், நீங்களும், நானும் கடிக்கும் ஒவ்வொரு பர்கர் பைட்’டிலும் எத்தனை ஆயிரம் கிருமிகள் நம் வயிற்றுக்கும், எத்தனை நூறு விவசாயக் குடும்பங்கள் தெருவுக்கும் வர்றாங்க???
06. மூணு பர்கர் சாப்பிட்ட மூணு வயசு சிறுவனுக்கு, தவிச்ச வாய்க்கு தண்ணி கூட தர முடியாத அவன் அம்மா…, இரண்டே வாரத்தில்.. அவனுக்கு பாலூத்தின கதை தெரியுமா????
இந்த சீப் ஃபுட்-டின் சோர்ஸ் என்ன???????????????????
இதையெல்லாம் தெரிஞ்சிக்க….நாம இன்னொரு விஷயத்தை தேடிப் போகணும். 1970-களில் அமெரிக்காவில் நடந்த விவசாயப் புரட்சி. நம்மூரில் வெகு சாதாரண விசயமாகக் கருதும் ஒரு மேட்டர். ஆனால்… அது ஒவ்வொரு அமெரிக்கனின் தலைமுடி வரைக்கும் பரவியிருக்குன்னா நம்புவீங்களா???
ரெண்டு இளைஞர்களும்… ஒரு யுனிவர்சிட்டிக்குள் போறாங்க. ரெண்டு பேரின் முடியும்.. கொஞ்சம் வெட்டப் பட்டு.. பரிசோதிக்கப் படுது. முடிவு…. ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அவங்க முடியில் கலந்திருப்பது..….. சாட்ச்சாத் நம்ம மக்காச்சோளம்.
இந்த ரிசல்ட்டைப் பார்த்து ஆச்சரியப் படும் ரெண்டு பேரும்…, அமெரிக்காவின் மத்தியில் இருக்கும் Iowa மாநிலத்தில் பயிரிடப் படும்… சோளம்.., எப்படி… நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த தங்கள் முடியில்.. கிடைக்க வாய்ப்பு யோசிக்க ஆரம்பிச்சி….,
… ஒரேயொரு ஏக்கர் நிலத்தை.. அதே Iowa மாநிலத்தில் குத்தகைக்கு எடுத்து… அதில் சோளம் பயிரிட்டு… அந்த சோளம்… எங்கிருந்து விதையாக வருதுன்னு தொடங்கி, அது எங்கெல்லாம்… போகுது… எப்படியெல்லாம் மாறுதுன்னு ஒரு வருடமாக.. அந்த சோளத்தின் பின்னாடியே சுத்துவாங்க. டாகுமெண்ட்ரியின் பெயர் King Corn. வாய்ப்பு கிடைச்சா.. இதையும் பாருங்க.
________________________________________1970-களில் விவசாயப் புரட்சிங்கற பெயரில்… அரசாங்கம்.. விவசாயிகளை சோளம் பயிரிட சொல்ல ஆரம்பிக்கிறாங்க. அதற்காக.. உங்களுக்கு தேவையோ.. இல்லையோ… ஒவ்வொரு ஏக்கருக்கும்…இத்தனை டாலர்ன்னு மானியம் கிடைக்க ஆரம்பிக்குது.
மானியம் கிடைக்குதேன்னு (இதிலேயே நேரடி,மறைமுகம்னு.. ஏகப்பட்டது) அத்தனை விவசாயிகளும்… தேவைக்கு அதிகமான அளவில் சோளத்தைப் பயிரிட ஆரம்பிக்க, அந்த சோளம்… பலப் பல வழிகளில்.. நம் ரத்தத்தில் ஊற ஆரம்பித்திருக்கு.
சோளம் ரொம்ப சீப்-ன்னு தெரியும். அது எத்தனால் தயாரிக்கவும், கொஞ்சமா பெட்ரோலில் கலக்கறாங்கன்னும் தெரியும். அது இல்லாமல்… அந்த சோளம்.. எத்தனை இடத்தில் பரவியிருக்குன்னு நினைக்கறீங்க? கண்டிப்பா கணக்கெடுக்க முடியாது. இதெல்லாம் இல்லாமல்… சோளத்தின்.. இன்னொரு சிறப்பு…….
……அதிலிருந்து கிடைக்கும் சர்க்கரை!!! கரும்பை விட.. மிக.. மிக.. மிக.. மலிவான சர்க்கரை. நாம குடிக்கும் கோக், பெப்ஸி, க்ரேப் சோடா.. போடா… வாடா…. அத்தனையிலும் இருப்பது… சோளம் மட்டும்தான்!!!
மெக்டொனாட்ஸில் ஒரு மீல் வாங்கிட்டு உட்காருறீங்கன்னா…., பர்கர், சோடா… அவ்வளவு ஏன்…. உருளைக் கிழங்கில் செஞ்ச ஃப்ரென்ச் ஃப்ரைஸில் கூட சோளம் கலந்திருக்கு. மிகக் குறைவான விலையில், நமக்கு சர்க்கரை வியாதியை தந்துகிட்டு இருக்கு. இது சோளத்தோட குறையில்லை. கம்மி காசில் அதிகம் சம்பாதிக்க.. இந்த உணவுக் கம்பெனிகள் கண்டுபிடித்த பொருள்.
இவர்களோட இந்த ‘சீப்’ தேவைக்காக… இவர்கள் அரசாங்கத்தை தூண்ட…, அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆசை காட்ட, எல்லோரும்.. இந்த சோளத்தை பயிரிட ஆரம்பித்து… இப்ப தேவைக்கு அதிகம்னு சொல்லி.. இதே கம்பெனிகள்.. மலிவான விலைக்கு விவசாயிகளிடம் இருந்து.. அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்வது. அது அரசாங்கத்துக்குவிற்கப்பட்டாலும்.. இவங்களுக்குத்தான் திரும்ப விற்கப் போறாங்க. நட்டத்தில் விற்ற விவசாயிக்கு… அரசாங்கம் தரும் மானியம் மட்டும்தான் அந்த மொத்த வருட உழைப்புக்கு கூலி. அந்த மானியம்… வரி கட்டும் மக்களிடம் இருந்து!!! எல்லோருக்கும் நாமம்!!! உணவுக் கம்பெனிகளுக்கு மட்டும் சோளம்!!!
கடந்த முப்பது வருடங்களுக்குள்… அமெரிக்காவில் பிறந்த அத்தனை ஜீவன்களுக்கும்.. அவர்களின் ஜீனே மாறிப்போய்… உடம்பு முழுக்க ‘சோளம்’ மட்டுமே ஓடிக்கிட்டு இருக்கு. மாடுகளுக்கு புல் போட்டா…., நாம.. பர்கரை $1 டாலருக்கு கடிக்க முடியாது. அதேதான்.. கோழி.. மீன் -ன்னு.. அத்தனை ‘உணவு’ விலங்குகளுக்கும்… கிடைக்கும் ஒரே சாப்பாடு.. ‘சோளம்.. சோளம்.. சோளம்’. மீனெல்லாம் சோளம் சாப்பிடுமா???
ஒரு சேர்ல…. ஒத்தைக் காலில்… ஒரு யானையையே நிற்க வைக்க பழக்கும் மனுசனுக்கு.. இந்த மீனை.. சோளம் திங்க வைப்பதா பெரிசு?! மாடு, கோழின்னு.. அத்தனையும்.. சோளம் சாப்பிட்டு.. சாப்பிட்டு…. கொஞ்ச நாட்களுக்குள்ளயே உடம்பு பெருக்க (நாமக்கல்லுக்கு வாங்க… அங்க கோழி வளர்க்கறதைப் பார்த்தா… சைவமாகிடுவீங்க), அந்த மாடு-கோழிகள்தான்… நமக்கு… லஞ்ச்!! அப்ப நாம சாப்பிடுறது கோழியை இல்லை. சோளத்தை!! நீங்க வெஜிடேரியந்தான்!!
________________________________________
King Corn & Food, Inc இரண்டுப் படங்களிலும்.. ஒரே காட்சி காட்டப் படும். ஆனால் வெவ்வேறு வருடங்களில்!! எதுன்னா.. இந்த ‘சோளத்தை’ மட்டுமே தின்று வளரும் மாட்டின் வயிற்றுப் பகுதி. சாப்பிடும் போது.. இந்தக் காட்சியை பார்த்துடாதீங்க!!! அதிலும் குறிப்பா… மெக்டொனாட்ஸ் சாப்பாடு சாப்பிடும் போது!!!! பார்த்தால்… வாந்திக்கு நீங்களே கேரண்டி!!! எத்தனை வருட இடைவெளியில்.. இந்தக் காட்சிகள் படம் பிடிக்கப் பட்டாலும்… சோளம் சாப்பிடும் மாடுகளின் உடல்நிலை ஒன்னேயொன்னு மட்டும்தான்!!! உவ்வ்வே!!!!!!!!
அந்த நாடு முழுக்க… ஒரே மாதிரியான ருசி கிடைப்பதற்காக..., இது மாதிரியான கம்பெனிகளின் டேஸ்டிற்கு ஏற்ப.. ஜீன்கள் மாற்றப் பட்ட.. கோழி-மாடு-பன்றிகளை மட்டுமே 99% எல்லோரும் வளர்க்கிறாங்க. மொத்த கொள்ளளவும்… இவர்களை நம்பியிருப்பதால்.. இந்த கம்பெனிகள் சொல்வது மட்டுமே சட்டம். எதிர்த்தால்.. காண்ட்ராக்ட் கட்!! அடுத்த வருடம்.. அந்த விவசாயிக் குடும்பம்.. நடுத்தெருவில்!!! இது எதுவும் தெரியாமல்.. நாமும் நம் குழந்தைகளும்…மெக்டொனாட்ஸில்.. kids zone -ல் சந்தோசமா பெப்ஸி குடிச்சி, பர்கர் கடிச்சிகிட்டு இருக்கோம்.
அமெரிக்க உணவின் தரக் கட்டுப்பாட்டை... கண்காணிக்கும் FDA (Food and Drug Administration)எல்லாம் எப்பவோ கண்ணை மூடியாச்சி. ஏன்னா… எந்த அரசாங்கம்.. ஆட்சிக்கு வந்தாலும்.. அந்தக் கட்சியை சார்ந்த…, இந்த உணவுக் கம்பெனிகளின்.. நெருங்கிய ஆட்கள் FDA -ஐ கண்ட்ரோல் செய்யுறாங்க. ஸோ… சாப்பிடும்.. உணவில்.. என்ன கலந்திருக்கு…, எத்தனை கலோரி சாப்பிடுறோம், இந்த உணவு எங்கே.. எப்படி தயாரிக்கப் பட்டது-ன்னு எந்த விவரமும் இல்லாமல்… இந்த ‘குப்பை உணவை’ மென்னுகிட்டு இருக்கோம்.
நீ என்ன சொல்லுறது??!! நான் சாப்பிடத்தான் போறேன் -ன்னு நினைக்கிறவங்க.. இதைத் தாண்டி படிக்க வேண்டாம்.
2006 வருஷம், இன்னொரு 9/11 நடந்த மாதிரியும், அந்த்ராக்ஸ் கிருமிகள் பரவின ரேஞ்சிற்கும் அமெரிக்கா முழுக்க ஒரே பீதி!!! 50 ஏக்கர் நிலத்தில்… கலிஃபோர்னியா மாநிலத்தின் ஏதோவொரு மூலையில் வளர்ந்திருந்த…..….., நம்ம பாப்பாய்ஸ் தாத்தா சாப்பிடுவாரே.. அந்த ஸ்பினச் கீரையில்.., எதோ ஒரு கிருமி இருக்க, இருப்பத்தாறு மாநிலத்தில் இப்ப இந்த கிருமி பரவிடுச்சி. மூணு பேர் அல்ரெடி காலி. சிறுநீரகப் பிரச்சனை.. அது.. இதுன்னு.. அல்லோகலம். இதுக்கெல்லாம் காரணம்…?
Escherichia Coli அல்லது சுருக்கமா E Coli. உணவை விஷமாக மாற்றும் ஒரு வகையான பாக்டீரியா. பெரும்பாலும்… ‘கழுவாமல்’ சாப்பிடும் எந்த உணவுப் பொருள் மேலயும் இது இருக்குமாம். சைவம்… அசைவம்னு எல்லாம் எந்த பாகுபாடும் கிடையாது.
ஒழுங்கான.. இடத்தில்.. வளரும் ஆடு-மாடு-கோழிகளே… சீக்கு பிடிச்சித் திரியும் போது… நகரக் கூட வழியில்லாமல் கூட்டம் கூட்டமாக சாக ரெடியாக இருக்கும்.. இந்த மெக்டொனாட்ஸ் கோழிகள் மட்டும் என்ன பணக்கார களையோட சுத்தப் போகுது??
ஒரு ஹிடன் கேமராவில்…, இப்படி… நோயில் இறந்தக் கோழிகளைக் கூட… இந்த சுகாதார உணவுக் கம்பெனிகள் அள்ளிப் போட்டுக் கொண்டு போக, ஏற்கனவே.. ஒரு மாட்டின் வயிற்றில் ஓட்டை போட்டு… அதிலிருந்து… இவர்கள் வெளியே எடுத்துக் காட்டும்.. அழுக்குகள் எல்லாம் பார்த்து.. குமட்டிக் கொண்டு வரும்போது…, இந்த E-coli மட்டும் என்ன சும்மாயிருக்குமா?? அதுவும்.. ஜம்முன்னு… இந்த அத்தனை உணவுகள் மேலேயும்.. ஜம்முன்னு வளர்ந்துகிட்டுதான் இருக்கு.
இப்படி E-coli பாக்டீரியா இருந்த பர்கர்களை சாப்பிட்ட, ஒரு மூணு வயசுப் பையன் இரண்டே வாரத்தில்.. சிறுநீரகப் பிரச்சனையில் இறக்க, பையனை பறிகொடுத்த அம்மாவால்… இந்த பண்ணாடைகளை ஒன்னும் புடுங்க முடியலை. இது மாதிரி குழந்தைகளை இழந்த நிறைய பேர் இன்னும் போராடிகிட்டே இருக்காங்க. ஆனாலும்.. அர்னால்ட் மாதிரியான அரை மெண்டல் அரசியல்வாதிகள் எல்லோரும்…
… இந்த கார்ப்பொரேஷன்களை காப்பாற்றுவதற்கு மட்டும்தான்.. தங்களோட.. ‘வீட்டோ’ பவரை உபயோகிக்கிறாங்க. Food, Inc படம் ஆறு வருடமாக எடுக்கப் பட்ட, வெறும் ஒன்னரை மணி நேர டாகுமெண்ட்ரி. இதன் இயக்குனர்/தயாரிப்பாளர் ராபர்ட் கென்னர் மாதிரி.. ஆர்வலர்கள் எல்லாம்…….
….. குறைந்த பட்சம்.. நாம் சாப்பிடும் உணவில்.. நாம் என்ன சாப்பிட்டுகிட்டு இருக்கோம்னு ஒரு லேபிள் அடிச்சி ஒட்டுங்கடா-ன்னு கோர்ட்டில் வாதாடி… வெற்றி பெற்றால்… அந்த அர்னால்ட் கூமுட்டை.. அதையும்.. தன்னோட வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி.. கேன்ஸல் பண்ணிடுச்சாம்.
மைக்ரோஸாஃப்ட் கம்பெனி எப்பவும்… தன்னோட சாஃப்ட்வேர்களின்… பிரச்சனைகளை.. ‘ஆணிவேரில்’ இருந்து பார்க்காது. ஒரு bug-ஆ?? ஓகே.. இந்தா patch!! நூறு bugs-ஆ? இந்தா சர்வீஸ் பேக்-ன்னு… ‘ஒட்டு போட்டே’ உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கு. அதே விசயத்தைத்தான்.. இந்த Food கம்பெனிகளும் பண்ணுறாங்க.
இறைச்சிக்காக வளர்க்கும் ஆடு, மாடுகளை Ecoli மாதிரி பாக்ட்ரீயாக்கள் வரவிடாமல் ஆரோக்கியமா வளர்க்கறதை விட்டுட்டு…, அந்த Ecoli பாக்டீரியாக்களை கொல்ல…, அந்த இறைச்சி மேல்.. இன்னொரு பூச்சி மருந்தை தெளிச்சி… சூப்பர் மார்க்கெட்களுக்கும், நம்ம பர்கருக்கும் அனுப்பறாங்க.
நெசமா.. சொல்லுங்க…. நீங்க பர்கரா சாப்பிடுறீங்க??????????
இது பேசி முடியற கதையில்லை. சொல்லி திருந்தப் போறதுமில்லை. முடிஞ்சா படம் பாருங்க. அதுக்கப்புறமும்.. அந்த கருமத்தை சாப்பிடத்தான் போறீங்கன்னா… தாராளமா குழி வெட்டிக்கங்க…………………..Thanks Hollywoodbala
ramajayam.kannan
https://m.facebook.com/ramajayam.kannan?refid=13