நீரிழிவு நோயைத் தடுக்க வருகிறது மூலிகை மாத்திரைகள்!

Must read

SONY DSC

லகிலேயே அதிக அளவு நீரிழிவு நோய் தாக்கம் இருப்பது இந்தியாவில்தான். இப்போது இந் நோயைத் தீர்க்க மூலிகை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் இரு வாரங்களில் இந்த மாத்திரைகள் விற்பனைக்கு வரப்போகிறது.

சமீபத்திய புள்ளி விபரங்களின் படி இந்தியாவில் 25 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருக்கிறார்கள்.  ஆய்வாளர்களின் கணிப்புப்படி இத்தெகை 2025-ல் 57 மில்லியனாக இருக்கும் என்று தெரியவருகிறது.

தற்போது இந்த நோயைக் குணப்படுத்த BGR-34என்ற புதிய சர்க்கரை நோய் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுவின் இரு ஆய்வுக்கூடங்கள் சேர்ந்து, நீரிழிவு நோய்க்கான இந்த , ஆயுர்வேத மாத்திரையை உருவாக்கி உள்ளன

இம்மாத்திரையை , ‘டயாபடிஸ் மெலிடஸ்’ எனப்படும், நீரிழிவு நோயின் இரண்டாம் வகையால் பாதிக்கப்பட்டவர்கள்  பயன்படுத்தலாம். இதனால் ; பக்க விளைவுகள் ஏற்படாது.

நீரிழிவு நோய்க்கான ஆயுர்வேத மருந்துகள், ஏற்கனவே, பயன்பாட்டில்  இருந்தாலும், அவை, அறிவியல் ரீதியில் சோதிக்கப்படாதவை. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள, பிஜிஆர் – 34 மாத்திரை, விலங்குகளை கொண்டு அறிவியல் ரீதியாக சோதிக்கப்பட்டுள்ளது . இதில், 67% பலனை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 15நாட்களுக்குள்  இந்த மருந்து விற்பனைக்கு வர இருக்கிறது. .இது சரக்கரையை குறைப்பதுடன் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் .மேலும் இதுவே ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல்பட்டு free radicalsம் கட்டுப்படுத்துகிறது. அதாவது உடலில் உள்ள செல்கள் கூடுதலாக உயிர்ப்புடன் இருக்க உதவுகிறது. மேலும் .உடம்பின் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகப்படுத்துகிறது என்றும்  ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த மாத்திரியைின் விலை ஐந்து ரூபாயாக இருக்கும் என்று தெரியவருகிறது.

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மாத்திரை மகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article