த.மா.காவுக்கு நான்கு தென்னை மரங்கள் சின்னம்: ஜி.கே. வாசன் அறிவிப்பு

Must read

FotorCreated33
 
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு நான்கு  தென்னை மரங்கள் சின்னத்தை தேர்தல் கமிசன் ஒதுக்கி உள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் த.மா.காவை உருவாக்கினார் ஜி.கே.வாசன். ஏற்கெனவே ஜி.கருப்பையா தலைமையிலான த.மா.காவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த சின்னம் கிடைக்கவில்லை.  காரணம், சமாஜ்வாடி கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அக் கட்சி தேசிய கட்சி என்பதால் த.மா.காவுக்கு சைக்கிள் சின்னம் தர முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து த.மா.காவுக்கு நான்கு தென்னை மரங்கள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article