திருமண நகை வாங்க லண்டன் பறந்த அஸின்!

Must read

nnnnnnnnnn

ம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான வேகத்திலேயே தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக் ஆனவர் அஸின். தொடர்ந்து கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா என டாப் ஹீரோக்களுக்கு ஜோடி சேர்ந்தார்.

தமிழில் சூர்யா நடித்த ‘கஜினி’ படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட.. இங்கு நடித்த அஸினே அங்கும் நடித்தார். அந்த ஒரு படத்திலேயே இந்தியில் டாப் ஹீரோயின் ஆனார். சல்மான்கான், அஜய்தேவ்கான், அக்ஷய்குமார், அபிஷேக்பச்சன், என பிரபல கதாநாயகர்களுடன் நடித்தார்.

இந்த நிலையில். மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவுக்கும், அஸினுக்கும் காதல் தீ பற்ற.. இப்போது திருமணம் நிச்சமாகியிருக்கிறது. எந்த புதுப்படத்தையும் அஸின் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியாக நடித்த ‘ஆல் இஸ் வெல்’ என்ற இந்தி படத்தோடு சரி.

வரும் டிசம்பரில் திருமணம் என்று பேசி முடித்திருக்கிறார்கள். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஆனாலும் திருமண ஏற்பாடுகள் தூள் பறக்கின்றன.

திருமண நகைகள் மற்றும் உடைகளை தேர்வு செய்ய லண்டன் கிளம்பிவிட்டார் அஸின். அங்கிருந்து அப்படியே பிரான்ஸ்,, அமெரிக்கா, ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கும் பறந்து பறந்து ஷாப்பிங் போகப்போகிறாராம்!

மைக்ரோமேக்ஸ் மாப்பிள்ளை என்றால் சும்மாவா?

More articles

Latest article