லண்டன்:

லங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி லண்டனில் உண்ணாவிரதம் துவங்கியுள்ளது.

TGTE_Hunger-Strike_1

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தான் ஆட்சிக்கு வந்தால் விடுவிப்பதாக அதிபர் தேர்தல் நடந்தபோது ஸ்ரீசேனா அறிவித்தார். ஆனால் அவர் இதுவரை தனது வாக்குறுதியை நிறைவேற்றாததால், சிறைப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் முழு கடையடைப்பு போராட்டமும் நடந்தது.

இந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் லண்டனில் உண்ணாவிரத போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் துவங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று (18.11.15)   டொரண்டோவில் உள்ள அமெரிக்க அரசு அலுவலகம் முன்பும், நியுயார்க்கில் உள்ள ஐ.நா பொதுமன்றத்துக்கு முன்னாலும் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் இடம்பெற இருக்கின்றன.