ரூபா தேவி
ரூபா தேவி

மதுரை
ரூபா தேவி, 26 வயது திண்டுகல்லைச் சேர்ந்த பெண் , பெடரேஷன் இன்டர்னேஷனல் ஆப் புட்பால் அசோசியேஷன் (FIFA) நடத்துகின்ற சர்வதேச போட்டிகளில் நடுவராக தகுதி பெற்றுள்ளார். இந்த சாதனையை பெற்ற முதல் தமிழ்நாட்டுப் பெண்மணி  இவராகத்தான் இருக்க முடியும்.
திண்டுக்கல் பகுதியில், கால்பந்து மிகவும் பிரபலமான விளையாட்டு என்கிறார் ரூபா. “நான் குழந்தையாக இருந்த பொழுதிலுருந்தே கால்பந்து விளையாடுவதில் மிகவும் ஆர்வம் உண்டு” என்றும் அவர் கூறினார்.
விளையாட்டிலிருந்த பேரார்வத்தை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை. ரூபா ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர், திண்டுக்கல் கால்பந்து சங்கம் ரூபாவிற்கு கால்பந்து விளையாடவும், விளையாட்டு அதிகாரியாகவும் நிதியுதவி பல செய்து ஊக்கப்படுத்தி வருகிறது.
— ஆதித்யா