சிம்பு, அப்பா ராஜேந்தர், தம்பி குறளரசன், அம்மா உஷா
சிம்பு, அப்பா ராஜேந்தர், தம்பி குறளரசன், அம்மா உஷா

சென்னை:திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் டி.ராஜேந்தரின் மகனும் நடிகருமான சிம்பு அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.

இப்போது அடுத்த சர்ச்சை. சமீபத்தில் அனிருத்துடன் இணைந்து சிம்பு ஒரு பாடலை பாடினார். வழக்கம்போல பெண்களை மோசமாக சித்திருக்கும் அந்த பாடலில் முதல் வரியே மிக ஆபாசமாக, கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது.

சிம்பு, அனிருத்
சிம்பு, அனிருத்

இதனால் அதிர்ச்சி அடைந்த பலரும், சமூகவலைதளங்களில் சிம்புவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

“பெண்கள் என்றாலே ஆண்களை ஏமாற்றுபவர்கள் என்கிற அர்த்தத்தில் தொடர்ந்து பேசியும் பாடியும் வருகிறார் சிம்பு. ஆனால் இவரது தாயாரான உஷாவை ஒரு திரையுலக ஆண் ஏமாற்றினார். அதன் பிறகுதான் உஷாவுக்கு டி.ராஜேந்தர் வாழ்க்கை காடுத்தார்.

ஆக, ஆண்களிடம் ஏமாறும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதற்கு சிம்புவின் அம்மாவே நடமாடும் உதாரணமாக இருக்கிறார். யதார்த்தம் இப்படி இருக்கையில், இதைப் புரிந்துகொள்ளாமல் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி வருகிறார் சிம்பு. அதுவும் சமீபத்திய பாடல் அருவெறுப்பின் உச்சம். இப்படி பாடியிருக்கும் சிம்புவும் அனிருத்தும் ஒரு நிமிடம் தங்கள் தாய்களை நினைத்துப் பார்க்க வேண்டும்” என்று பலரும் சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.