ஜல்லிக்கட்டு அனுமதி: ஈ.வி.கே.எஸ். வரவேற்பு! குஷ்பு கண்டனம்!

Must read

kush
சென்னை:
ல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரே நேரத்தில் பாராட்டும், கண்டனமும் எழுந்துள்ளது.
அக் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.  அவர், “ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க  முழு முயற்சி மேற்கொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, “இது வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான நாடகம்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, “தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க வேண்டும். இந்த ஆண்டு நடத்துவதற்கு அனுமதி கிடைத்தது மகிழ்ச்சிதான்.  ஆனால் பாரதிய ஜனதா கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக  நடத்தும் நாடகம்தான் இது.
கடந்த 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ஜல்லிக்கட்டுக்கு தடை இருந்தபோதும் சிறப்பு அனுமதி பெற்று காங்கிரஸ் அரசு நடத்தியது.  ஆனால்,  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த ஆண்டே ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் வரும்போது மக்களை கவர்வதற்காக இவ்வாறு  மத்திய பாஜக அரசு செயல்படுகிறது” என்று கண்டனம் தெரிவித்தார்.
 
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கிய  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.   அதன்படி,மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டிற்கு காளைகள் உகந்தது தானா என பரிசோதனை செய்ய வேண்டும். எனவும், வாடிவாசலில் இருந்து 15 மீட்டர் தொலைவிற்குள்தான் காளைகளை அடக்க முயற்சிக்க வேண்டும்.
 

More articles

Latest article