சேற்றுப்புண் தீர அருமருந்து!

Must read

 

Tinea-pedis

ழைக்காலத்தில் வரும் நோய்த்தால்லைகளில் ஒன்று சேற்றுப்புண்.  நீரில் அதிக நேரம் கால் வைக்க வேண்டியிருப்பதால் தோல் புண்ணாகிவிடும்.

இந்தத் தொல்லையிலிருந்து விடுபட எளிய, அருமையான மருத்துவம் ஒன்று உண்டு.

எப்படி?

வெளியிலிருந்து வந்த பின் காலை கழுவி விட்டு நன்கு உலர விடவும். இந்த மழையில் எப்படி உலரும்? என்கிறீர்களா? ஏங்க இந்த Hair dryerஐ தலைக்கு மட்டும் தான் பயன்படுத்தனுன்னு சட்டமா இருக்கு? சரி மருந்துக்கு வருவோம். வேப்பெண்ணெயும், மஞ்சள் தூளும் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்திலிட்டு நன்கு கலக்கி சிறு தீயில் வைத்து நன்கு கொதிக்க விட்டு கைப்பொறுக்கும் சூட்டுக்கு மேலான சூட்டில் பஞ்சு சுற்றிய.குச்சியால் எடுந்து வலியும் நமைச்சலும் கொண்ட சேற்றுப்புண்ணில் வைக்க உடனடியாக வலியும் நமைச்சலும் தணியும். அப்படியே படுத்துறங்கவும். இப்படியே 2 நாட்கள் செய்ய சேற்றுப்புண் போயே போச்சி!

இளம்வழுதி கலையரசன்

More articles

Latest article