1

லைமறைவாக(!) இருந்த சிம்பு ஒருவழியாக, தங்களது குறள் டிவி மூலம் பீப் பாடல் பற்றி தன்னிலை விளக்கத்தைக் கொடுத்துவிட்டார். இதைப் பார்த்தவர்களுக்கு சிம்பு மீது இன்னும் அதிகமான வருத்தமும், ஆதங்கமும் கோபமும் ஏற்பட்டது என்பதுதான் உண்மை.

அந்த அளவுக்கு தனது ஆபாச பாடலுக்கு சப்பைக்கட்டு கட்டியிருப்பதுதான் காரணம்.

ஆனால், விசயம் தெரிந்த பலர், சிம்புவைவிட அவரது அப்பா டி.ராஜேந்தர் மீது ஆதங்கம் கொள்கிறார்கள். (அவரும் அதே குறள் டிவியில் பீப் பாடல் பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.)

ஆரம்ப காலத்தில் டி.ராஜேந்தருக்கு நெருக்கமாக இருந்த ஒருவர் கூறிய சில விசயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

“சிம்பு சீரழிய காரணமே, அவரது அப்பா டி.ராஜேந்தர்தான். அவரிடம் உதவி இயக்குநராக ஒருகாலத்தில் வேலை பார்த்தவன் நான். அப்போது சிம்பு சிறுவன். அந்த சமயத்தில், டி.ஆர். “உஷா” என்கிற பத்திரிகையை நடத்தினார். சில சமயங்களில் அங்கு என்னை வரச் சொல்வார்.

அங்கு செல்லும்போது ஒருமுறை தனது டி.ராஜேந்தர், சிறுவனான தனது மகனையும் அழைத்து வந்தார். சிம்புவுக்கு பத்து வயது இருக்கும். அப்போது வேண்டுமென்றே, அங்கிருக்கும் கோப்புகள் மீது சிறுநீர் கழித்துவிட்டார் சிம்பு. இது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.   ஆனால், இதைப் பார்த்து ரசித்து சிரித்தார் அப்பா டி.ராஜேந்தர்.

அங்கிருந்தவர்களும் பதைபதைப்புடன் வேடிக்கை பார்த்தனர். அப்பா டி.ஆரே ரசித்து சிரிக்கும்போது, மற்ற யாரேனும் கண்டிக்க முடியுமா?

”இப்படி அடிக்கடி நடக்கிறது” என்று வருத்தத்துடன் பிறகு சொன்னார் அங்கு பணியாற்றிய நண்பர் ஒருவர்.

அப்போது நடந்த இன்னொரு அதிர்ச்சி சம்பவமும் நினைவில் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் சிம்பு வீட்டில் வேலைக்கார பெண்மணி ஒருவர் இருந்தார். சிறுவன் சிம்புவை, இடுப்பில் தூக்கி வைத்து உலாவருவார். அப்போது ஒருமுறை, சிறுவன் சிம்பு, அந்த வேலைக்கார பெண்மணியை தொடக்கூடாத இடத்தில் தொட்டுவிட்டார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண்மணி, சிம்புவின் தகப்பனார் டி.ராஜேந்தரிடமும், அம்மா உஷாவிடமும் புகார் செய்தார். ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது இன்னொரு அதிர்ச்சி” என்றார்.

உஷாவும் டி.ராஜேந்தரும் தயாரித்த படத்தில் புடரடக்சன் மேனேஜராக இருந்த ஒருவர் சொன்ன அடுத்த அதிர்ச்சி சம்பவம் இது: “சிம்பு இப்படி ஆனதற்குக் காரணம் அவரது தாய் தந்தையர்தான். சிம்பு சிறுவனாக இருந்த போது ஏதேதோ வார்த்தைகளைச் சொல்லி கொஞ்சுவார்கள். பாசத்தை வெளிப்படுத்த இதுதானா வழி..? அவர்களைப் பார்த்து சிம்புவும் அப்படி பேச ஆரம்பித்துவிட்டார், அந்த வயதிலேயே! அதை பெற்றவர்கள் ரசிப்பார்கள்..” என்று ஆதங்க பெருமூச்சைவிட்டவர், இன்னொர அதிரச்சி சம்பவத்தைச் சொன்னார்:

“உஷா ராஜேந்தர் தயாரித்த படம் ஒன்றில் பணியாற்றிய கலை இயக்குநர் அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக வேறு படத்தில் வேலை செய்ய சென்றுவிட்டார். அங்கும் ஏதோ பிரச்சினை. ஆகவே டி.ஆர். படத்தில் பணி புரிந்ததற்காகன சம்பளத்தை வாங்க வந்தார். எப்போதுமே பண விவகாரம் எல்லாம் டி.ஆர். மனைவி உஷாதான் கவனிப்பார். ஆகவே அவரிடம் கேட்டார்.

அவரோ ஆத்திரமாக, “திடீர்னு எங்க படத்திலேருந்து போயிட்டே.. எங்களுக்கு எவ்வளவு பிரச்சினை தெரியுமா” என்று சண்டை போட்டார்.

 

2

அந்த கலை இயக்குநர் (செட் போடுபவர்), “அம்மா… தப்புதாம்மா! இப்போ பணத்துக்கு கஷ்டப்படுறேன். பசுவைத் தேடி வந்த கன்று மாதிரி உங்ககிட்ட வந்திருக்கேன்.. நீங்கதாம்மா கொடுக்கணும்” என்று சொல்ல.. பலபேர் இருந்த அந்த படப்பிடிப்பு தளத்தில் எந்த பெண்மணியும் செய்யத்துணியாத காரியத்தை செய்தார் உஷா.

அங்கிருந்த அனைவரும் உறைந்து போயினர். அந்த கலை இயக்குநர் ஓடியே போய்விட்டார்.

பெற்றவர்கள் இப்படி இருந்தால் பிள்ளைகள் எப்படி ஒழுங்காக வளரும்” என்றார் அந்த புரடக்சன் மேனேஜர்.

மேலும் திரைத்துரையினர் பலரும் இதே பாணியில் புலம்புகிறார்கள்: “எந்தவித ஒழுங்கும் இல்லாதவர் சிம்பு. இவர், படப்பிடிப்புக்கு சரியாக இவர் வராததால் பல தயாரிப்பாளர்கள் நாக்குதள்ளி போயிருக்கிறார்கள். டெக்னீசியன் டென்சன் ஆகியிருக்கிறார்கள்.

“பசங்க” என்கிற தரமான படத்தை அளித்த இயக்குநர் பாண்டிராஜுக்கே ரத்தக்கண்ணர் வரவைத்தவர் சிம்பு. அவரது நடவடிக்கையே வித்தியாசமாக விபரீதமாக இருக்கும். இதை கண்டிக்க வேண்டிய டி.ஆர்., தனது மகன் செயலுக்கு சப்பைக்கட்டுத்தான் கட்டுவார். அது சிம்புவுக்கு இன்னும் வசதியாகப்போய்விட்டது” என்கிறார்கள்.

மேலும் சிலர், “திடுமென ஆன்மிகத்தில் நாட்டம் காட்டுவதாகச் சொல்லிக்கொண்டார் சிம்பு. ரிஷிகேஷ், ஹரித்துவாருக்கு எல்லாம் போய் வந்தார். ஆனால் அங்கு இவர் சென்றது கடவுளை கண்டாரோ இல்லையோ வேறொரு பழக்கத்துக்கு ஆளாகிவிட்டார். இதை அறிந்தும்கூட தடுக்க டி.ஆர். முயற்சிக்கவில்லை.

அல்ல. கஞ்சா அடிக்கத்தான். இந்த கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானதும் அவரது நடவடிக்கைகள் இன்னும் மோசமாக ஆகிவிட்டன” என்கிறார்கள். என்றார்கள்.

இன்னும் சிலர், “தன்னிலை மறந்த நிலையில் சிம்பு செய்யும் ராவடி கொஞ்சநஞ்சமல்ல. அதுமட்டுமல்ல.. தன்னை நம்பி வந்த நம்பர் நடிகையுடன் லிப்ஸ் லாக் செல்பி எடுத்து இணையத்தில் உலவவிட்டார் சிம்பு. தந்தை டி.ஆரோ, இதற்கும் சப்பைக்கட்டு கட்டினார்.

அதே போல கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஓட்டல் லாபி ஒன்றில் ஒரு ஜோடி முத்தமிடுவது போன்ற வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இருந்தது சிம்பு போல இருந்தது. இதையும் சிம்புவே பரவவிட்டதாகத்தான் பேசப்பட்டது. அப்போதும் டி.ஆர். கண்டிக்கவில்லை.

 

3

அவ்வளவு ஏன்… உச்ச நடிகரின் மூத்த மகளுக்கும் சிம்புவுக்குமான காதல் தோல்வி அடைந்தது. அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கும் அவரது தாயாருக்கும் போன் செய்து வக்கிரமாக பேசினார் சிம்பு. அந்த பெண்கள் பரிதாபமாக பதில் அளித்தார்கள். அந்த ஆடியோவும் லீக் ஆனது.

பேசியது சிம்பு.. அந்தப்பக்கம் இருந்த பெண்கள் இந்த பேச்சை லீக் செய்ய வாய்ப்பே இல்லை. அப்படியானால் யார் லீக் செய்திருப்பார்கள்? இப்போதும் டி.ஆர். பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை” என்கிறார்கள்.

வழக்கறிஞர் ஒருவர் கூறிய சம்பவம் அடுத்தது:

“இன்னொரு சம்பவம்… சிம்புவுக்குச் சொந்தமான கார் சென்னை அருகே உத்திரமேரூர் அருகே மின்னல் வேகத்தில் பறந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இருசக்கரக்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனால், “எங்களது காரை சில நாட்களக்கு முன்பே டிரைவர் திருடிச் சென்றுவிட்டார்” என்று சொல்லி அந்த வழக்கிலிருந்து தப்பினார். இதற்கு அவரது தந்தை டி.ஆரும் உடந்தையாக இருந்தார்” என்றார்.

“இந்த பீப் பாடல் விவகாரத்தில்கூட, தன் மீது தவறே இல்லை என்கிறார் சிம்பு. அதற்கு ஒத்துப்பாடுகிறார் அப்பா டி.ராஜேந்தர். சிம்புவை சீரழிப்பது டி.ராஜேந்தர்தான். பிள்ளை மீது பாசம் இருப்பது இயல்புதான். ஆனால் அந்த பாசமே பிள்ளையை தவறான நடவடிக்கைக்கு தள்ளிவிடக்கூடாது.

தன்னம்பிக்கைக்கு உதாரணமாக டி.ராஜேந்தரை சொல்பவர் உண்டு. இப்போது தப்பான அப்பாவுக்கு உதாரணமாகி நிற்கிறார் ராஜேந்தர். இனியாவது அவர் திருந்த வேண்டும். மகனையும் திருத்த வேண்டும்” என்கிறார்கள் டி.ராஜேந்தரின் நலம் விரும்பிகள்.

அனுக்ஷா