சிம்பு நயன்

அருவெறுப்பான பீப் பாடலால் தலைமறைவாகி திரிறார் சிம்பு. இதே போன்ற ஒரு பாடலால்தான் நயன்தாரா ஏற்கெனவே அப்செட் ஆகி ஓடித் தப்பித்தார் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

“பசங்கட பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன் நடித்தார்கள். சிம்பு வழக்கம்போல ஷூட்டிங் வராமல் இழுத்தடிக்க.. தேதிகள் வீணாயின. இதற்கிடையில் மனம் திருந்திய (!) சிம்பு, “விடுபட்டு போன பாடல் காட்சியை எடுக்கலாம்” என்றுவர, நயன் எகிறி குதித்து ஓடிவிட்டார்.

சிம்புவும், டி.ராஜேந்தரும் ஏதேதோ பஞ்சாயத்தெல்லாம் பேசிப்பார்த்தார்கள். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று புகார் கொடுத்தார்கள்.

ஆனால், “மாட்டவே மாடடேன்” என்று மறுத்துவிட்டார் நயன்தாரா.

ஏன் இவ்வளவு பிடிவாதம் என்று இப்போது செய்தி லீக் ஆகியிருக்கிறது.

சமீபத்திய பீப் பாடலுக்கு நெருக்கமாக அந்த பாடலை எழுதியிருந்தாராம் கவிஞ்சர் சிம்பு. நயனை கடுமையாக வசைபாடியிருந்தாராம் அந்த பாட்டில்.

இதனால்தான் நயன் நடிக்க மறுத்துவிட்டார். “என்னை மோசமா திட்டறமாதிரியான பாடல்ல நான் நடிக்க முடியுமா” என்கிறாராம்.

இந்த பீப் கேஸ டீல் பண்ணா, பல விவகாரங்கள் வரும் போலிருக்கே..!