குறும்பட விழா: போட்டியில் வென்றால் பெரிய திரை வாய்ப்பு!

Must read

9f95cb20-ce2f-41d2-a37f-abbefe42a1ac
 திரைத்துறையில் நுழைய பல வருடங்கள் போராட வேண்டித காலகட்டம் இருந்தது.  இயக்குநர் லட்சியத்தில்  முப்பது வருடங்களாக துணை இயக்குநராகவே இருந்தவர்கள் உண்டு. 
ஆனால் சமீபகாலமாக,  முன் அனுபவமும் இல்லாமல் குறும்படம் எடுத்து அதன் மூலம் திரையுலகில் கால்பதித்து கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் பலர்.
ஆகவே அனைவரது கவனமும் குறும்படங்களின் மீது பதிந்திருக்கிறது.  இந்த நிலையில் குறும்பட விழா நடத்தி, வெற்றி பெறுவோருக்கு  பெரிய திரை வாய்ப்பும் கிடைக்கும் என்றால் புதிய படைப்பாளிகளுக்கு அருமையான வாய்ப்புதானே! 
இந்த வாய்ப்பை வழங்குபவர் இயக்குநர் ரமேஷ் செல்வன். 
 விஜயகாந்த் நடித்த உளவுத்துறை, சத்யராஜ் நடித்த கலவரம்,  உட்பட பல படங்களை இயக்கிய இவர், ஒரு குழுவாக இணைந்து குறும்பட விழாவை நடத்துகிறார்.  குழுவில் பிரபல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள் உண்டு. 
நூறு குறும்படங்களில் இருந்து பத்து படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படும்.  சிறந்த படங்களை எடுத்தவர்களுக்கு “ஸ்ரீ சாய்ராம் சினிமாஸ்” நிறுவனம், திரைப்படம் இயக்க வாய்ப்பு அளிக்கும்! 
குறும்பட படைப்பாளிகளே.. தயாரா?
 

More articles

Latest article