குட்டிக்கதை : இறைவனை அடைந்த ஒற்றை வாழைப்பழம்!

Must read

lots_of_bananas
ண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாரை அறுத்து,  தன் வேலைக்காரனிடம் கொடுத்து, “கோயிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வா….” என்றார். வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.
அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன், “நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது….”  என்றார். திடுக்கிட்ட பண்ணையார், “இறைவா  நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன்…”  என்றார்.
இறைவன், “இல்லை ஒரு பழம் தான் எனக்கு வந்து சேர்ந்தது…” என்றார்.
விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து, “நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோயிலில் கொண்டு சேர்த்தாயா…..” என்றார்.
அவன் “ஆம்” என்றான்.
பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது. வேலைக்காரனை வேகமாக அறைந்தார். “உண்மையைச் சொல், இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன்…” எனறார்.
அவன், “உண்மையைச் சொல்லி விடுகிறேன், வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான், நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன், மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன்..” என்றான்.
பண்ணையாருக்குப் புரிந்து விட்டது. ஏழைக்குக் கொடுத்த பழமே இறைவனைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. கோயிலுக்குக் கொடுத்த பழம் சேரவில்லை!
கோயிலில் இருக்கும் இறைவனுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது ஏழைகளுக்குப் போய்ச் சேராது. ஏழைகளுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது இறைவனிடம் போய்ச் சேர்ந்து விடும்..
கோயிலில் போய்க் கொடுப்பதும், ஏழைகளுக்குக் கொடுப்பதும் ஒன்றா என்று சிலர் கேட்கலாம். ஏழைகளின் வயிறு அஞ்சல்பெட்டி, இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை இதில் போட்டால் இறைவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும்…… “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்…..”
வாழப்பாடி ஷாபீர பானு

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article