கல்லூரியில் செல்போன் பேசினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

Must read

 
சென்னை:  கல்லூரியில் செல்போன் பேசினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று கிண்டி அண்ணா யுனிவர்சிட்டி என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டுபாடு விதிக்கப்பட்டு உள்ளது.
guindy eng college
தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக உள்ளங்கைக்குள் உலகத்தையே கண்டு வருகிறோம். இளைய தலைமுறையினர்  அறிவியல் வளர்ச்சியின் பயனை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தாமல், அழிவுபாதையிலேயே செல்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள், மாணவ மாணவிகள் கைகளில் .புத்தகம் இருக்கிறதோ இல்லையோ செல்போன் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். சமூக வளைதளங்களில் உறுப்பிராகாத செல்போன் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்களை வரை அனைவரும் வாட்ஸ்அப், பேஸ்புக் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
செல்போனுக்கு அடிமையாகி  கிடக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கவனம் சிதறுவதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் அவர்கள் தவறான வழிக்கு செல்வதற்கும் வழிவகை செய்கிறது.
மாணவர்களை நல்வழிப்படுத்தவும், படிக்கிற நேரத்தில் அவர்களின் கவனம் சிதறாமல் இருக்கவும் செல்போன்கள் பயன் படுத்துவதற்கு பல பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அண்ணா யுனிவர்சிட்டி கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் செல்போன் பேசினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.. இதனால் மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து விடுகிறார்கள்.  இதேபோல் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளில் செல்போன் உபயோகத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்.
 

More articles

1 COMMENT

Latest article