கர்நாடகத்தில் தமிழக இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்: தலைவர்கள் கண்டனம்

Must read

சென்னை:
கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழ் இளைஞர்,  காவிரி போராட்டத்தில் கன்னட நடிகர் நடிகைகளை விமர்சித்து முகநூலில் பதிவு செய்ததால், கன்னட அமைப்பினரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.  இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
a
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்குத்தான் உண்டு.  ஆகவே அங்கு ஆளும் காங்கிரஸ் அரசுதான் பொறுப்பு.
தமிழகத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். ,  மழைக்காலம் வருவதற்கும் முன்  நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது என்றார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்,திருமாவளன், காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு தலைமுறைதலைமுறையாக நம்மை வஞ்சித்து வருகிறது. இதற்கு தீர்வு காணவேண்டிய மத்திய அரசு மெத்தனமாக உள்ளது என குற்றம் சாட்டினார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணனும், கர்நாடகவில் தமிழக இளைஞர் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.  மேலும்,  கர்நாடக வாழ் தமிழர்களுக்கு அந்த மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொன்.ராதா தெரிவித்துள்ளார்.
தமிழ் இளைஞன் தாக்கப்பட்ட விவகாராத்தில் கர்நாடக முதல்வரை கடுமையாக கண்டிப்பதாக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும்  தெரிவித்துள்ளார். அந்த இளைஞன் மீது விழுந்த அடி இந்திய ஒருமைபாட்டின் மீது விழுந்த அடி என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
 

More articles

Latest article