ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத உணவுப்பொருட்கள்!

Must read

 
ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத உணவுப்பொருட்கள்
தக்காளி:
1-fruit6
தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால் அது தனது நறுமணத்தையும் சுவையையும் இழந்துவிடும்.  இன்னும் கனியாத நிலையில் உள்ள தக்காளி ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டால் சுத்தமாகப் பழுக்காது. 5 டிகிரிக்கு குறைவான குளிர்வில் வைக்கப்படும் தக்காளியின் மேற்பரப்பு மிகவும் மிருதுவாகிவிடும். இது உண்பதற்கு ஏற்ற நிலை அல்ல.
 
உருளைக்கிழங்கு:1-fruit3
உருளைக்கிழங்கை உலர்ந்த, குளிர்சியான இடத்தில் வைக்க வேண்டும், ஃப்ரிட்ஜில் அல்ல. ஃப்ரிட்ஜில் வைத்தால் உருளைக்கிழங்கின் ஸ்டார்ச் சர்க்கரையாக மாறிவிடும். பின்னர் அது உருவத்தில் உருளைக்கிழங்காகவும் சுவையில் சர்க்கரைவள்ளிக் கிழங்காகவும் மாறிவிடும்.
வெங்காயம்:
1-fruit4
தோல் உரிக்கப்படாத வெங்காயத்தை உலர்ந்த குளிர்சியான இடத்தில் வைக்க வேண்டும்,  ஃப்ரிட்ஜில் அல்ல. தோல் உரிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட வெங்காயத்தை ஃப்ரிட்ஜின் ஈரப்பதம் பாதிக்காதவகையில் ஒரு பாத்திரத்தில் இறுக்கமாக மூடி ஏழு நாட்கள் வரையில் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
 
ரொட்டி வகைகள்:
1-fruit1
அதிக நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால் உங்கள் ரொட்டி வரட்டி ஆகிவிடும். காரணம் ப்ரிட்ஜின் குளிர்ச்சி உங்கள் ரொட்டியின் ஸ்டார்ச்சை பாதித்து கடினமாக்கிவிடும்.
வாழைப்பழம்:
1-fruit2
வாழைப்பழம் வெப்பப் பிரதேசங்களில் விளையும் கனியாகும். அதை ஃப்ரிட்ஜில் வைத்தால் முற்றிலும் கறுத்துவிடும். சற்று காயாக உள்ள வாழையை ஃப்ரிட்ஜில் வைத்தால் அது பழுக்காது. வெளியே எடுத்தவுடன் கறுத்து விடும். அதுமட்டுமன்றி செரிமானத்துக்கு தேவையான என்சைம்கள் முற்றிலும் கெட்டுவிடும்.
                                                     பூண்டு:
1-fruit5
வெள்ளைப் பூண்டையும் உலர்ந்த குளிர்ச்சியான இடத்தில்தான் வைக்க வேண்டும். ப்ரிட்ஜிலோ அல்லது பாலித்ன் பைகளிலோ வைக்கக்கூடாது.

More articles

Latest article