கருணாநிதிக்கு மீண்டும்…  கண்கள் பனித்தது, இதயம் இனித்தது

Must read

கருணாநிதி -அழகிரி கோப்பு படம்
கருணாநிதி -அழகிரி கோப்பு படம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியும் இன்று சந்தித்தனர்.
கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக, மு.க. அழகிரி அதிரடியாக சில கருத்துக்களை தெரிவித்துவந்தார். இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தொடர்ந்து  திமுக பற்றியும், மு.க.ஸ்டாலின் பற்றியும் தொடர்ந்து கடுமையாக அழகிரி விமர்சித்ுத வந்தார்.  ஆனாலும் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க, குடும்பத்தினர் முயன்று வந்தார்கள். அது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மு.க.அழகிரி கோபாலபுரத்தில் கருணா நிதியை சந்தித்து பேசினார்.  பின்னர் வெளியே வந்த அவர் பத்திரிகையாளர்களிடம்  ’தலைவர் உடல் நிலைபற்றி விசாரித்தேன்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து மு.க.அழகிரி மீண்டும் தி.மு.க.வில் சேருவார் என்று  பேசப்படுகிறது.
 
 

More articles

Latest article