கமல் – அஜித் ரசிகர்கள் மோதல்

Must read

 

vedalam107

 

தீபாவளி அன்று கமலின் தூங்காவனம், அஜீத்தின் வேதாளம் ஆகிய இரு படங்களும் ரீலீஸ் ஆகின்றன. அஜீத் ரசிகர்கள் முந்திக்கொண்டு, வேதாளம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள்களில் கொடி, பேனர் எல்லாம் வைத்து தூள் பறத்திவிட்டார்கள்.

ஆனால் கமல் ரசிகர்கள் கொஞ்சம் லேட்டாகத்தான் சுதாரித்தார்கள். கமல் பிறந்தநாளான நேற்றுதான், தூங்காவனம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் பேனர் வைக்கச் சென்றார்கள். பல ஊர்களில் மல்ட்டி காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் இரு படங்களும் வெளியாகின்றன. ஏற்கெனவே அங்கெல்லாம் அஜீத் ரசிகர்கள் பேனர் வைத்துவிட்டதால், கமல் ரசிகர்களக்கு பேனர் வைக்க இடமில்லை. சில இடங்களில் அஜீத் பேனர்களை அகற்றிவிட்டு, கமல் ரசிகர்கள் தங்களது பேனர்களை வைக்க.. இதனால் முட்டிக்கொண்டு நிற்கிறது இரு தரப்பும்.

ஆனால் இதுவரை பெரிய அளவில் மோதல் ஏற்படவில்லை. ஆனால்,  இதே போல கேரளாவில்  தங்களது  பேனர்களை வைக்க  இடமில்லாததால், கமல் ரஜிகர்கள் வேதாளம் பட பேனர்களை கிழித்து விட்டதாக ஒரு படம் வாட்ஸ் அப்பில் பரவிவருகிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் பதட்டமடைந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் இதுபோல நடந்தவிடாமல் கமல், அஜீத் இருவருமே தங்களது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இல்லாவிட்டால், தீபாவளி அன்று முட்டிக்கொண்டு நிற்பார்கள் இருதரப்பு ரசிகர்களும்.

 

More articles

Latest article