சென்னை

மிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாட்டிறைச்சி தயார் செய்ய வேண்டும் என அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்

பிரதமர் மோடி தமிழர்களை அவமதிக்கும் வகையில் மோடி கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்குத் தமிழர்களிடம் பிரதமர் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் சென்னையில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் ,

“பாஜக அலுவலகத்திற்கு வரவிருக்கும் தேதியை முன்கூட்டியே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம்”

என்று பதிவிட்டார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம்,

“எங்களுக்கு அசைவ உணவுகள் பிடிக்கும். கமலாலயத்தில் மாட்டிறைச்சியை தயார் செய்து வையுங்கள். நாங்கள் வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு அறிவிக்கிறோம். அண்ணாமலை அதற்குள் தயார் செய்து கொள்ளட்டும்”

என்று கூறி உள்ளார்..