ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தா விரட்டி அடிங்க: கனிமொழி ஆவேசம்

Must read

s

கடலூர் கூட்டத்தில் பேசிய கனிமொழி, ” ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தா விரட்டி அடிங்க”என்று ஆவசமாக பேசினார்.

தி.மு.க. எம்.பி கனிமொழி கடலூர் கூட்டத்தில் பேசும்போது, ‘பெண்களுக்கு சமுதாயத்தில் பொறுப்பு அதிகம். ஆனால், பொறுப்பற்ற முதல்வர் என்றால் அது ஜெயலலிதாதான். மத்திய மின்துறை அமைச்சர் முதல்வரை சந்திக்க முடியவில்லை என்கிறார். இதுவரை மக்களை சந்தித்து ஜெ., குறைகளைக் கேட்டதுண்டா?

வரும் தேர்தலில் இந்த நிலையை மக்கள் மாற்ற வேண்டும். தி.மு.கதான் அடுத்து ஆட்சிக்கு வரும். அப்போது, மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். முக்கியமாக மது அறவே ஒழிக்கப்படும்.

ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தால் பெண்கள் அவர்களை விரட்டி அடியுங்கள்” என்று ஆவேசமாக பேசி முடித்தார் கனிமொழி.

More articles

Latest article