என்னுடைய படத்தின் உள்ளடக்கம் இதர படத்தின் பாதிப்பில் உருவானதல்ல : அட்லி

Must read

‘ராஜா ராணி’, ‘தெறி’ மற்றும் ‘மெர்சல் இயக்கிய அட்லி தனது படங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

‘ராஜா ராணி’, ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய மூன்று படங்களுமே ‘மெளன ராகம்’, ‘சத்ரியன்’ மற்றும் ‘அபூர்வ சகோதரர்கள்’ ஆகிய படங்களின் தழுவல் என்றே பலரும் விமர்சித்தார்கள்.அதே போல், ‘பிகில்’ படத்தைப் பார்த்துவிட்டு ‘சக் தே இந்தியா’ என்று கூறினார்கள் .

இந்த ஒப்பீடு தொடர்பாக இயக்குநர் அட்லி, “நான் பார்க்கும் ஒவ்வொரு படமும் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நான் அந்தப் படங்களைப் பார்த்திருக்கிறேன், எனக்கு அவை பிடித்தும் இருக்கிறது. ஆனால் என்னுடைய படத்தின் உள்ளடக்கம் அவற்றின் பாதிப்பில் உருவானதல்ல” என்று தெரிவித்துள்ளார் அட்லி.

More articles

Latest article