sv new

ப்பப்ப ரன்னிங் ரேஸ்ல பின்னாடி போனாலும் மறுபடி ஹீரோவா.. நல்ல ஸ்பீடுல ஓடி வர்ற விஷயம்.. மதுவிலக்கு! நேத்து கூட சில அமைப்புகள் மதுவிலக்கை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்காங்க..!

எல்லோரும் இணைஞ்சு போராட வேண்டிய விஷயம்தான் இது. ஆனா ஒரே கோரிக்கைய வலியுறுத்தி  தனித்தனியா போராடறாங்க..!

ஒருவேளை, மதுவிலக்கு வந்துட்டா,  பெருமை வேற யாருக்காவது போயிடுமே அப்படிங்கிற பயம்தான் இந்த தனித்தனி போராட்டத்துக்குக் காரணம்.

அரசியல்ல அது சகஜம்தான்.  அதனால செயலை விட்டுட்டு, நோக்கத்தை பார்ப்போம். நல்ல நோக்கம்தான்!

ஆனா பூரண மதுவிலக்கு சாத்தியமானு தெரியலை. ஒருவேளை, “நூறு மார்க்குக்கு பரிட்சை எழுதி நாப்பது கிடைச்சாலே போதும்” அப்படிங்கிற மாணவ மனநிலையா கூட இருக்கலாம்.

எப்படியானாலும் மதுவிலக்கு ரொம்ப அவசியம்தான்.  பத்து வருஷம் முன்னால் குடிக்கிறவங்க வயசு விகிதம் 18 –  21  அப்படின்னு இருந்தா, இப்போ 11 – 13  அப்படிங்கிற லெவலுக்கு போயிடுச்சு.

பள்ளிக்கூடம் போறாங்களோ இல்லையே பாருக்கு போறாங்க.. பசங்க டவுசர்ல குச்சி மிட்டாய் இருந்த காலம் போய், குவார்ட்டர் பாட்டில் இருக்கிற அவலம் வந்துடுச்சு.

kudi neew

தமிழ்நாட்டுல ஆறாயிரத்திச் சொச்சம்  ரேஷன் கடை இருக்கோ இல்லையோ அதைவிட அதிக எண்ணிக்கையில டாஸ்மாக் கடைங்க இருக்கு. இது  நியாயமான செயலைா தெரியலை.

இதிலேருந்து வர்ற பணத்துலதான் மக்களுக்கு இலவச பொருட்கள் கொடுக்க முடியுதுன்னு ஆளுங்கட்சி  சமாதானம் சொல்லலாம். அப்படி பார்த்தா,  அரேசே லாட்டரி, ரேஸ், சிகப்பு விளக்கு பகுதிகளை நடத்தலாமே.

ஒரு அரசுக்கு வருமானம்தான் முக்கியம்னா, ஜனநாயகம், தேர்தல் எதுவுமே தேவையில்லையே.. பேசாம டாட்டா அம்பானி கிட்ட சி.எம். போஸ்ட்டை கொடுத்திடலாமே. ஏன்னா அவங்க சிறந்த நிர்வாகியா இருந்து தங்களோட நிறுவன வருமானத்தை பெருக்கறாங்களே… !

இதையெல்லாம் சொன்னா “அந்த மாநிலத்தில சாராயக்கடை இல்லையா”னு சொல்றாங்க. பஸ் டிக்கெட் விலை ஏத்தினாகூட, “இங்க விட அந்த மாநிலத்தில அதிக கட்டணம்” அப்படின்னு விளக்கம் சொல்றாங்க. எதெத்துக்குத்தான் மத்த மாநிலத்தை ஒப்பிடறதுன்னு இல்லையா…?

“உன் பேர்  என்ன?”னு கேட்டா, “என் தாத்தா யாருன்னு தெரியுமா”னு பதில் சொல்றமாதிரி இருக்கு இந்த விளக்கம்.

நிச்சயமா இது நேர்மையற்ற பதில்தான்.

அதே நேரத்தில  திடீர்னு இத்தனை கட்சிகளுக்கு விழிப்பு வந்து, மதுவிலக்குக்கா போராடறது அப்படிங்கிறது நிச்சயமா தேர்தல் காரணமாத்தான். மது குடிப்பவர்கள் வீடடில் இருக்கிற தாய்மார்கள் ஓட்டெல்லாம் கிடைக்கும் அப்படிங்கிற எண்ணம்தான்.

ஆனா ஒரு வாரத்துக்கு மேல ஆனா பழைய எதுவுமே இங்கே பழைய மேட்டர்தான். குடிகார புருஷனைக்கூட நாலுநாள் திட்டுவாங்க.. அதுக்கப்புறம், “அந்த சனியனுக்கு ஒரு சோடா வாங்கி வை”யின்னு கேஷூவலா சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க. ஏன்னா கஷ்டத்தையும் வாழ்க்கையில ஒரு பகுதியா ஏத்துக்கிற மனநிலை நமக்கு இருக்கு. இதை அரசியல் கட்சிங்க புரிஞ்சுக்கணும்.

இதை ஓட்டுவங்கியா மாத்தணும்னு எதிர்க்கட்சிங்க நினைக்கிறப்ப, இதே மாதிரி ஆளுங்கட்சி நினைக்காதா? அதனால நிச்சயமா மதுவிலக்கு கொண்டுவருவாங்க.. அதாவது  தேர்தல் மே மாசம் வருதுன்னா, மார்ச் மாசம் மதுவிலக்கு அமல்படுத்துவாங்க.  ஜெயிச்சி வந்த பிறகு, ஜூன் மாசம், “கள்ளச்சாராயம் பெருகிடுச்சு.. அதை ஒழிக்க மதுவிலக்க மதுவிலக்கை வாபஸ் வாங்கறோம்”னு சொல்லிடுவாங்க.

இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம்…  மதுவிலக்கு கோரி போராடற வழிமுறைகள் சரியில்ல.  நோக்கம் மட்டுமில்ல.. அதற்கான போராட்ட முறையும் சரியான வழியில இருக்கணும்.

சசி பெருமாள் நோக்கம் சரிதான். நான்கூட அவரை சப்போர்ட் பண்ணியிருக்கேன்.  ஆனா  பெட்ரோல் கேனை எடுத்துகிட்டு டவர்ல ஏறுவதை எல்லாம் போராட்டம் என்று ஒப்புக்க முடியாது.

அப்படி அவர் செய்தபோது  எத்தனையோ பேர் வேடிக்கை பாத்திருக்காங்க. ஊக்குவிச்சிருக்காங்க. இந்த மனநிலையும் தப்பு.

முதல்ல இப்படி தடுக்காம வேடிக்கை பாத்தவங்கள அரெஸ்ட் செஞ்சிருக்கணும்.

மதுவிலக்கு பத்தி இன்னொரு கோணத்திலயும் நாம யோசிக்கணும்.

மருந்து கடையில விஷம் கூடத்தான் விக்கிறாங்க.  அதை வாங்கி எத்தனை பேர் குடிக்கிறாங்க?

நாடகம், சினிமான்னு நாப்பது வருஷமா இருக்கேன். இன்னைக்கு வரைக்கும் ஒரு சொட்டு மது என் நாக்குல பட்டதில்லே. என் அப்பா அப்படித்தான் என்னை வளர்த்தார். நான் அப்படித்தான் என் மகனை வளர்த்திருக்கேன்.

எதுக்கா சொல்றேன்னா.. படிச்ச பையன் இப்படி குடிக்கிறானேன்னு சிலபேரை பாத்து பலபேரு ஆதங்கப்படுறாங்க. பள்ளிக்கூடம் கல்வியைத்தான் கொடுக்கம். ஒழுக்கத்தை, குடும்பத்துலதான் கத்துக்க முடியும்.

மதுவிலேருந்து மனிதன் தப்பிக்கணும்னா இரண்டே வழிதான்.  கடுமையான சட்டதிட்டம் வேணும்.  அல்லது தனிமனித ஒழுக்கம். வேணும்..!

சட்டதிட்டம் எந்த அளவுக்கு சாத்தியம்னு தெரியல. ஆனா தனமனித ஒழுக்கத்தை, நாம நினைச்சா கொண்டுவந்திடலாம்.

அதுதான் முக்கியம்!

மீண்டும் அடுத்த வாரம் இன்னொரு விஷயம் பற்றி பேசுவோம்.