w-simbu-E-L
பெண்களை இழிவுபடுத்தும் பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஒரு மகளிர் அமைப்பினர் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக சிம்பு மீதும் அனிருத் மீதும் கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கோவை காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிம்புவுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது.  காவல் நிலையத்தில் ஆஜராவதை சிம்பு தொடர்ந்து தவிர்த்து வந்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, பிப்ரவரி 24ம் தேதிக்குள் சிம்பு கோவை காவல்நிலையத்தில் ஆஜராகி காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து  24ம் தேதிக்குள் நடிகர் சிம்பு ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு வருவார் என்ற  எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால்  , நேற்று(ஞாயிறு) மாலையே கோவைக்கு வந்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இரவு ஏழு மணி அளவில் தனது வழக்குரைஞருடன் ரேஸ் கோர்ஸ்  காவல் நிலையத்துக்கு சென்றார். பின்னர் அங்கு காவல் ஆய்வாளரைச் சந்தித்து தனது மகன்  சிம்பு மீதான வழக்கு குறித்து விளக்கம் கேட்டார்.

காவல் நிலையத்தில் ஆஜராக வந்த சிம்பு
காவல் நிலையத்தில் ஆஜராக வந்த சிம்பு

இந்த நிலையில் இன்று (திங்கள்)  கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.    காவல் நிலையத்தைவிட்டு வெளியே வந்த சிம்பு,  செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“காவல்துறையினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறியுள்ளேன். என் மீது எந்த தவறும் இல்லை. காவல்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன். இதற்கு மேல் இறைவன் பார்த்துக் கொள்வான்” என்றார்.
விசாரணை முடிந்த வரும் சிம்பு
விசாரணை முடிந்த வரும் சிம்பு

காவல்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளித்தேன். என் மீது எந்தத் தவறும் இல்லை. காவல்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன். இதற்கு மேல் இறைவன் பார்த்துக்கொள்வான்.
காவல் நிலையத்துக்கு சிம்பு வந்தபோது, அவரது ரசிகர்கள் சுமார் ஐம்பது பேர் ஆரவாரத்துடன் பின்னாலேய வந்து கோசங்களை எழுப்பினார்கள்.  காரிலிருந்த சிம்பு,  அப்படியே கதவு வழியாக எழுந்து கைகளை ஆட்டினார்.  அப்போது ரசிகர்கள்  மிக உரத்த குரலில் “தமிழின் தலைமகன் சிம்பு வாழ்க” என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.   பொதுமக்கள் பலரும் சிம்புவை காண ஆர்வத்துடன் கூடி இருந்தார்கள். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.