மது விலை உயர்வை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தபோது.
மது விலை உயர்வை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தபோது.

சென்னை: தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கமும் சட்டசபைத் தேர்தலில்  முங்கிப்பார்த்துவிடவது என்று களத்தில் இறங்கப்போகிறது.  நாளை மறுநாள் ( 26ம் தேதி) பிரசாரத்தை ஆரம்பிக்கிறதாம் இந்த சங்கம்.
இது குறித்து சங்கத்தின் தலைவர் பி. செல்லப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் 2016 சட்டசபைத் தேர்தலில் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக சட்டசபையில் குரல் கொடுத்திட வேட்பாளர்களை நிறுத்துகிறது. 26ம் தேதி அன்று கோட்டை கொடிமரத்தை நோக்கி வணங்கி பிரசாரம் தொடங்குகிறது” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இக்கட்சி சார்பில் குமாரசாமி என்ற பெயரில் ஒரு வேட்பாளரை நிறுத்தி கிறு கிறுக்க வைத்தது இந்த சங்கம.  இப்போது சட்டசபை பொதுத் தேர்தலையும் “கலக்க” போகிறது மது குடிப்போர் சங்கம்!
இப்போதைய "தேர்தல்" அறிக்கை..
இப்போதைய “தேர்தல்” அறிக்கை..

இதன் தலைவர் செல்லப்பாண்டியிடம், “எந்த நம்பிக்கையில் தைரியத்தில் தேர்தலில் நிற்கிறீர்கள்” என்றோம்.
“இது வரைக்கும் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் மக்களை குடிகாரர்களாகவே பார்த்து, மதுவில் மூழ்கடித்தன. நாங்கள்தான், மதுகுடிப்போரின் உரிமைகள் பற்றி பேசுகிறோம். இன்று ஆண்களில் 86 சதவிகிதம் பேர் குடிகாரர்களாகி விட்டார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அதே போல பெண்களில் 15 சதவிகிதம் குடிக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது.
இவர்களுக்கு எல்லாம் நன்மை செய்யவது நாங்கள் மட்டும்தான். அந்த நம்பிக்கையில்தான் தேர்தலில் நிற்கிறோம்” என்றார்.
ம்.. அப்படிப்போடு!
(மதுபாட்டில் விலையை உயர்த்தக்கூடாது என்று ஏற்கெனவே உண்ணாவிரதம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய அமைப்புதான் இந்த மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்!)