எங்கே போகிறது இந்த தேசம்?

Must read

ஒலிம்பிக்கில் கலந்துகொண்டுள்ள இந்திய வீரர்கள் இதுவரையிலும் பதக்கங்கள் ஏதும் பெறவில்லை. திறமையற்றவர்களே ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ளார்கள்.  அவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வெளிவ்ந்த வண்ணம் உள்ளது. விளையாட்டில் பாகுபாடு பார்ப்பதே இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதற்கிடையில் மத்திய அமைச்சர் விஜய் கோயல் தனது சாகாக்களுடன், ரியோடி ஜெனிரோ விளையாட்டு மைதானத்தில் அத்துமீறி நடந்து கொண்ட செயல் பற்றியும், இதுபற்றி ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு எச்சரிக்கை செய்தது பற்றியும், இதன் காரணமாக இந்த வார இறுதியில் அவர் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உருவாகி உள்ள சர்ச்சைகள் ஓயும் முன்னர் மற்றுமொரு புது சர்சை கிளம்பி உள்ளது.
vijaygoell
ஹரியானா மாநில அரசு தனது விளையாட்டுத்துறை அமைச்சர் அனில்விஜ் என்பவரை பிரேஸில் தலைநகர் ரியோடிஜெனிரோவுக்கு அனுப்புவதற்கு ஆயத்தமாகிறது என்பதே அந்த சர்ச்சை.
விளையாட்டிற்கும் , போட்டிகளுக்கும் சம்பந்தமே இல்லாத ஹரியான அமைச்சர் தனது சாகாக்கள் எட்டு பேருடன் பயணத்தை நாளை (ஆகஸ்ட் 14)  பிரசில் பறக்க உள்ளார் என்று தெரிகிறது. அமைச்சர் உட்பட நான்கு பேருக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டும், கூட வரும் மற்ற ஐந்து பேருக்கு சாதாரண வகுப்பு டிக்கெட்டும் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூபாய் ஒரு கோடி செலவு செய்துள்ளது ஹரியான அரசு.
ஒலிம்பிக்கின் இறுதி நாள் விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் திட்டமிட்டுள்ளது அந்த குழு. இதற்காக ஒரு டிக்கட் ரூ.90,000/= வீதம் கிட்டத்தட்ட ஒன்பது இலட்சம் ரூபாய் செலவில்  ஒன்பது டிக்கட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். கலந்து கொள்பவரின் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டிருக்கும் இந்த டிக்கெட்டுகள் மாற்றவும் முடியாது, கட்டணத்தை திரும்பப் பெறவும் முடியாத வகையில் உள்ளவையாகும்.
இவையனைத்தையும் விட பெருங்கொடுமையான விசயம் என்னவென்றால், இந்த ஒரு அமைச்சர் பிரேஸில் தலைநகர் சென்றுவிட்டு திரும்புவதால், இம்மாதம் 19ம் தேதி நடைபெறவிருந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
ஹரியானாவிலிருந்து ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளச் சென்றுள்ள விளையாட்டு வீரர்களுடன் அவர்களின் பயிற்சியாளர்கள் உடன் செல்ல மறுக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரும், விளையாட்டிற்கே சம்பந்தமில்லாத அவரது சாகாக்கள் (சட்ட மன்ற உறுப்பினர்கள்) கியான் சந்த்குப்தா மற்றும் விஜய் பால், முதலமைச்சரின் ஊடக ஆலோசகர், கூடுதல் தலைமைச்செயலர் கே.கே. காந்தல்வல், துறை இயக்குனர்கள் ஜகதீப் சிங், ஓ.பி.ஷர்மா மற்றும் அமைச்சர், கூடுதல் தலைமைச்செயலர் ஆகியோரது தனி அலுவலர்கள்.
எங்கே போகிறது இந்த தேசம்?

More articles

Latest article