உள்ளாடையில் ஜெ. படம் ஒட்டியவர் கைது! பதிலுக்கு ஜெ. கவர்ச்சி படத்தை பரப்பும் நெட்டிசன்கள்!

Must read

2014_06_03_12_14_16_Jayalalitha-7

திருச்சி: உள்ளாடையில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளியிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் அதிபர் சரவணன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்த கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

 

J-Jayalalitha-8

சமீபத்திய வெள்ளத்தால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சிக்கிய மக்களுக்கு  மக்களுக்கு, வழங்கப்படும் நிவாரண பொருட்களில், முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டும்படி தன்னார்கவர்களை அதிமுகவினர் வற்றுபுறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, தகராறு செய்வோர் பற்றி தகவல் கொடுத்த அதிமுக தலைமை கழகம், போன் எண்களை  அறிவித்துள்ளது.

 

Jayalalitha_film2

இந் நிலையில் கணேஷ் டெக்ஸ்டைல் உரிமையாளரான சரவணன், உள்ளாடை ஒன்றில், முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒட்டி வைத்து  படம் எடுத்து அதை சமூக தளங்களில் வெளியிட்டார்.

j

 

இதைத் தொடர்ந்து சரவணனை காவல்துறையினர் கைது செய்தார்கள். இதையடுத்து,  முதல்வர் ஜெயலலிதா, திரைப்படங்களில் நடித்த கவர்ச்சி காட்சிகளை  சமூகவலைதளங்களில் பலர் பரப்பி வருகிறார்கள்.  ஜெயலலிதாவின் கவர்ச்சி படங்களை பதிவிட்டு, “இது சென்சார் சர்ட்டிபிகேட்டுடன் திரைப்படத்தில் வந்த காட்சிதானே.. இதற்காக கைது செய்ய முடியுமா” என்று கேள்வியும் கேட்கிறார்கள்.  இது டிரண்ட் போல் உருவாகிவருகிறது.

 

 

More articles

Latest article