உருவானது “தேசிய திராவிட முற்போக்கு கழகம்”

Must read

 
1
வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி துணைப் பொது செயலராக இருந்த வேலூர் டாக்டர் ஜி.எஸ். சிவக்குமார், அக் கட்சியில் இருந்து விலகி, “தேசிய திராவிட முற்போக்கு கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார்.  சிவக்குமார் பேசும்போது, “நடைபெறவுள்ள தேர்தலில் தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை வேல்முருகன், தள்ளாடியது. அதையடுத்து அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியதும் தவறு” என்றார்.
எனவே அந்த முடிவை எதிர்த்து தாம் தனிக்கட்சி தொடங்கியுள்ளதாகவும், அதிமுகவுக்கு 234 தொகுதிகளிலும்  ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளப்போவதாகவும்  தேசிய திராவிட முற்போக்கு கழக நிறுவன தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சிவக்குமார் தெரிவித்தார்

More articles

Latest article