????????????????????????????????????

சென்னை :

சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இலவசமாக பழுது நீக்கும் முகாம் இன்று துவங்கியது. வரும் 21ம் தேதி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், டிவிஎஸ், என்பீல்ட், பஜாஜ், யமஹா, ஐசர் மோட்டார் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த முகவர்கள் கலந்துகொள்கிறார்கள். எந்தெந்த கடைகளுக்குச் சென்றால் இலவசமாகப் பழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற விவரம் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வாகனங்களை பழுது பார்ப்புக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னால், பட்டியலில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட முகவரிடம் பேசி, பழுது பார்க்கும் கடையில் கூட்டம் அதிகமாக இருக்கிறதா, எத்தனை மணிக்கு வரலாம் போன்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.

இணைய தள முகவரி:

http://www.tn.gov.in/sta/service_centres_2wheeler.pdf