1
சுதாகொங்காரா இயக்கி மாதவன் நடித்த “இறுதிச்சுற்று” வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குத்துச்சண்டை பற்றி எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம்,  இந்திய விளையாட்டுத்துறையில் நடக்கும் விவகாரமான விசயங்களை வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது. ஆகவே,  பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கம், “படத்தின் சில காட்சிகள் கிறிஸ்துவ மதத்தை இழிவு படுத்துவதாக இருக்கிறது” என்ற  எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், படக்குழுவினருக்கும உற்சாகம் அளிப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
குத்துச்சண்டையில் உலகப்புகழ் பெற்ற மைக் டைசன், “பாக்சிங் பற்றிய இறுதிச்சுற்று படத்தை பார்க்க விரும்புகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
இதை அறிந்த படத்தின் நாயகன் மாதவன், மகிழ்ச்சியுடன் அந்த பதிவை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.\
“இறுதிச் சுற்று”க்கு நல்லதொரு அங்கீகாரம்தான்!