இன்று: மார்ச் 8

Must read

download
 
சந்திரபாபு நினைவு நாள் (1974)
தமிழ்த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கிய சந்திரபாபு,  1947ஆம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.
தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.
தமது நடிப்பிற்காகவும், பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார்.
 
international-womens-day-feel-special
 
அனைத்துலக பெண்கள் நாள்
ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று உலகெங்கும்  பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.  ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
இந்த நவீன யுகத்திலும் உலகெங்கிலும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலை மாறி, பெண்களை  சம உயிராக கருத வேண்டும் என்பதை வலியுறுத்தும் நாள் இது.

More articles

Latest article