curry-leaves-759

யன்படுத்திவிட்டு தூக்கி எறிவதற்கு உதாரணமாக கறிவேப்பிலையை சொல்வார்கள். இந்த செய்தி அப்படி அல்ல வாசகர்களே… படித்து பின்பற்றுங்கள்!

ஆம்.. தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்தால், கறிவேப்பிலையை விடவே மாட்டீர்கள்.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன.

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால்…

கொழுப்புக்கள் கரைய:

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறுவீர்கள்.
இரத்த சோகை தீர:

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். முகம் பொலிவு பெறும்.

சர்க்கரை நோயை சமாளிக்க :

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படும்.

இதய நோய் நீங்க:

கறிவேப்பிலை , இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும்.
செரிமானம் அதிகரிக்க :

அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

முடி வளர்ச்சிக்கு :

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடி நன்கு வளரும். அதோடு நரை முடி அகலும்.

சளித் தொல்லை நீங்க..

ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், சளித்தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.

கல்லீரல் பாதிப்பு தீர:

தொடர்ந்து கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கல்லீரலை சீராக செயல்பட வைக்கும்.

இனிமே கறிவேப்பிலையை, கறிவேப்பலையா யூஸ் பண்ணாதீங்க.. காய்கறி மாதிரி சாப்பிடுங்க.. ஆரோக்கியமா வாழலாம்!

  • அம்புஜம் பாட்டி