இங்கே விஜயகாந்த்.. அங்கே ரிஷிகபூர்!

Must read

12459972_813582738785938_1531514782_n

மும்பை: விஜயகாந்த் துப்பியது சரியா, தப்பா என்று இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதே போல வட இந்திய நெட்டிசன்களை விவாதிக்க வைத்திருப்பவர் இந்தி நடிகர் ரிஷிகபூர். மனிதர் எப்போதுமே ஏதாவது ஏழரையை கிளப்பிவிட்டுக்கொண்டே இருப்பார். முன்பு பத்திரிகையாளர்களும் அவரிடம் சிக்கியது உண்டு.
ஆனால் இப்போதைய சர்ச்சை வேறு விவகாரம். இந்தி நடிகை ட்விங்கிள் கண்ணாவுக்கு “எக்குதப்பான” வாழ்த்து சொல்லி பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறார் ரிஷி.
“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்ணே! 1973 ம் ஆண்டு பாபி படத்திற்காக நான் உன் அம்மா டிம்பிள் கபாடியாவுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த சமயத்தில், நீ உன் அம்மாவின் வயிற்றில் இருந்தாய்!’
– இதுதான் அவர் ட்விட்டிய வாழ்த்து!
இப்படி வாழ்த்தியது சரியா, தப்பா என்று இந்தி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து படுபயங்கர வார்த்தைப்போரில் இறங்கியிருக்கிறார்கள்!
ஹூம்.. எல்லாருக்கும் மெல்ல ஏதாவது மேட்டர் கிடைச்சிருது!

More articles

Latest article