ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

Must read

index

 

“ஆஸ்திக்கு ஒருத்தன், ஆசைக்கு ஒருத்தன் என்று இந்தக்கால பெண்கள் வச்சுக்கிறாங்க” என்கிற ரீதியில் ஒரு தொடரில் வசனம் வந்து சர்ச்சையைக் கிளப்பியது.

அந்த வரிசையில் இப்பது இடம் பிடித்திருப்பது, அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சி.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர், காம்ப்பியர் திவ்யதர்ஷினி போல இமிடேட் செய்தார். உடனே சக போட்டியாளர், “மூடிட்டு போ” என்றார் எகத்தாளமாக.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த நேயர்கள் அதிர்ச்சியில் உறைய, அரங்கிலோ சிரிப்பலை.

“இந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இது போல அடிக்கடி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்” என்று பலரும் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.

சத்தியப்பிரியன்
சத்தியப்பிரியன்

பிரபல எழுத்தாளர் சத்தியப்பிரியன், “அந்த நிகழ்ச்சியை எதிர்பாராத விதமாக நானும் பார்த்தேன். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண் போட்டியாளரை பார்த்து சர்வ சாதாரணமாக ” மூடிட்டு போ ” என்கிறார். அந்தப் பெண் போட்டியாளரும் கொதித்து எழாமல் அவனைப் பார்த்து பல்லை காட்டினார். இது என்னவிதமான நாகரீகம் என்பது தெரியவில்லை

சிம்புவின் ஆபாச பாடல் சமூக ஊடங்களில் பரப்பப்பட்டன. அதுவே தவறுதான். ஆனால் அதைவிட தவறு, தொலைக்காட்சிகளில் ஆபாசத்தை புகுத்துவது. ஏனென்றால் வீட்டில் அனைவரும் பார்க்கக்கூடிய ஊடகம் இது.

தரம் கெட்ட நிகழ்ச்சிகள் தருவதில் விஜய் டி.விக்கு இணை யாரும் இருக்க முடியாது. நகைச்சுவை என்ற பெயரில் அவர்கள் குரூப் அறிவிப்பாளர்களை வைத்து அவர்கள் அடிக்கும் கூத்துகள் நான்காம் தரம் கூட இல்லை அதற்கும் கீழே. விஜய் டிவி தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

“வித்தியாசமான கோணத்தில் சுவையான நிகழ்ச்சிகளை கொடுக்கிறது” என்ற பெயர் விஜய் டிவிக்கு உண்டு.  அதே நேரத்தில், “ஆபாசத்தின் எல்லையைத் தொடுகிறது” என்ற கடுமையான புகார்கள் தொடர்ந்து வருகின்றன.  விஜய் டிவி தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article