kayiru
அரைஞாண் கயிறு என்பது நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்புக் கயிறு. எதற்கு இதை அணிந்து கொள்கிறோம் என்று கேட்டால், திருஷ்டி படக் கூடாதென்று கூறுவார்கள். உண்மையிலேயே அந்த கயிற்றை கட்டுவதற்குக் காரணம் என்ன?
தொண்ணூறு சதவீத ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் (ஹெர்னியா) வருவதுண்டு, அதைத்தடுக்கவே தமிழர்கள் பலர் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டியிருப்பார்கள். பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது; சிலர் அதைத் தங்கத்திலேயே செய்து அணிந்திருப்பர். இன்றைக்கு, ஓல்டு பேஷன் என்று கருதி அதை பலர் கட்டுவது கூடக் குறைந்து விட்டது.
அரைஞாண் கயிறு கட்டுவது, நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமென்றே கூறலாம். அதை மனதில் கொண்டு, இருக்கின்ற தலைமுறைக்கு அதன் பயனை எடுத்துரைப்போம்.
-ஆதித்யா