அய்யய்யோ.. அது பொய்! : அவசரமாய் மறுக்கும் டைரக்டர்

Must read

 

trisha

பொதுவா காதல் விவகாரம் பற்றி ஏதாவது செய்தி வரும்போதுதான் “இல்லை இல்லே” என்று பதறுவார்கள் சினிமாகாரர்கள்.  ஆனால் “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா” படத்தின் இயக்குநர்  ஆதிக் ரவிச்சந்திரன் வேறொரு செய்திக்காக பதறிப்போய் மறுப்பு வெளியிட்டிருக்கிறார்.

“த்.இ.ந.” படத்தின் வெற்றியால் மகிழ்ந்திருக்கும் ஆதிக், அதே சந்தோஷத்துடன் கமலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  உடனே, “ கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கப்போகிறார் ஆதிக்” என்று நாளிதழ் ஒன்று செய்தி வெளியட.. மனுசன் வியர்த்து விறுவிறுத்து மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதான் அவரது அறிக்கை:

த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் வெற்றி பெற்றதற்காக எனக்கும் என் தந்தைக்கும் ரோல் மாடலாக இருக்கும் உலகநாயகன் பத்மபூஷன் டாக்டர். கமல் ஹாசன் அவர்களின் ஆசி பெற அணுகிய போது பெருந்தன்மையுடன்   ஏற்று கொண்டு எங்களை சந்தித்தார்.aathik ravi

அவருடன் மகழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த போது எங்கள் வாழ்நாளில் ஒரு பெரிய கனவு நினைவானதாகவே உணர்ந்தேன். நேரம் கிடைக்கும் போது த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் பார்க்கும்படி கோரிக்கை வைத்த போது பெருந்தன்மையுடன் பரிசீளிப்பதாக கூறினார். இந்நிலையில் இன்று ஒரு நாளிதழில் நான் அவரை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், படத்தை பற்றிய காட்சிகள் பற்றி அவரிடம் விவரித்ததாகவும் செய்திகள் வெளியாகிவுள்ளன. இது முற்றிலும் தவறான செய்தியாகும். சினிமா வாழ்வில் ஆரம்பகட்டதில் இருக்கும் எனக்கு இச்செய்தி அதிர்ச்சி தருகிறது. நானும் என் தந்தையும் என்றென்றும் உலகநாயகனின் உண்மையான மற்றும் நேர்மையான ரசிகர்கள். இந்த செய்தி பிரசுரத்தமையால் அவர் மனம் புண்படும்படி நேர்ந்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இப்படிக்கு,
ஆதிக் ரவிசந்தரன் 

நம்ம சந்தேகம் என்னன்னா…  கமல் படத்தை இயக்கறதா வந்த நியூஸை ஏன் இத்தனை படபடப்பா மறுக்கிறாரு…?

 

More articles

Latest article