அமிதாப்பச்சன், ரஜினி, கமல், சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட்

Must read

rajni kamal
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக அடுத்த மாதம் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிறமொழி நடிகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இதில் கலந்துகொள்கிறார்கள். ரஜினிகாந்த் இதில் கலந்து கொண்டு உடல் நிலையை கருதி முதல் பந்தை வீசி போட்டியை தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் கமல்ஹாசன் ஒரு அணி சார்பில் விளையாடுவார் என்று தெரிகிறது.
நட்சத்திர கிரிக்கெட்டில் 8 அணிகள் மோதுகின்றன. ஒரு அணியில் 6 நடிகர்கள் இருப்பார்கள். இதன்மூலம் எல்லா அணிகளுக்கும் சேர்த்து 48 நடிகர்கள் விளையாடுகிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் 6 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4 ஆட்டங்கள் நடைபெறும். முதல் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதியில் மோதும். அதில் ஜெயிக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடும். காலை 10 மணியில் இருந்து இரவு 9 மணி வரை விளையாட்டுகள் நடைபெறும்.
சூர்யா, விஷால், ஆர்யா, தனுஷ், ஜீவா, விஷ்ணு உள்ளிட்ட 8 பேர் அணிகளின் கேப்டன்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு கதாநாயகி தூதுவராக இருப்பார். நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட கதாநாயகிகள் தூதுவர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article