semaan-Interview-3

தனித்தமிழ்நாடுதான் எங்கள் கோரிக்கை என்று திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சொல்கிறாரே..!

அப்படி அவர் சொல்லலை.. சொல்ல மாட்டார்.

சொல்லியிருக்கார்.. வார இதழிலும் அப்படி பேட்டி கொடுத்திருக்கார்..

அப்படின்னா ஏன் திராவிடர் விடுதலை கழகம்னு வச்சிருக்காரு.? தமிழர் விடுதலைக் கழகம்னு வச்சுக்கலாமே.. (சற்று இடைவெளிவிட்டு) அப்படி எங்கண்ணன் கொளத்தூர் மணி தனித்தமிழ்நாடு வாங்க்கொடுத்தா என்னைவிட மகிழ்ச்சி அடையவறவன் வேறு யாரும் இருக்க முடியாது.. (சிரிக்கிறார்.) கே: சரி, உங்கள் பார்வையில் தமிழர் என்பவர் யார்

உங்கள் பார்வையில் தமிழர் என்பதற்க்கு வரையறை என்ன?

தமிழை தாய்மொழியாகவும், வாய்மொழியாகவும் கொண்டவர்கள். தமிழர்கள். தெலுங்கு, மலையாளம், உருது போன்ற வேறு எந்த மொழியும் தெரியாமல் தமிழ் மட்டுமே தெரிந்தவன் தமிழன்.

பிறமொழி வம்சாவளிகள் பலர் அந்த மொழியை மறந்து பல தலைமுறைகளாக தமிழ் மட்டுமே அறிந்து வாழ்கிறார்கள். உங்கள் பார்வையில் அவர்களும் தமிழர்கள்தானா?

அவங்களை, தாய் மொழி மறந்தவங்களாத்தான் பார்க்க முடியுமே தவிர தமிழனா பாக்க முடியாது. (சற்று இடைவெளிவிட்டு) ஆனா எனக்கு தெரிஞ்சி தமிழன்தான் தாய்மொழியை மறந்தவன். மத்த மொழி ஆட்கள் யாருமே அப்படி இல்லை.

இருக்கிறார்கள்..

இல்லை.. அப்படி யாரும் இல்லை..!

சரி.. மற்ற மொழிக்காரர்கள் இங்கு வாழலாம்.. ஆனா ஆளக்கூடாது என்கறீர்கள். அப்படியானால் அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதே.. ஓகேவா.. ..

ஓட்டுரிமை கொடுத்திருக்கக்கூடாது.. கொடுத்துட்டாங்க…! இனி பறிப்பது சரியாகாது..!

தேர்தலில் போட்டியிட்டு ஆளும் உரிமையும்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது..!

அதை மட்டும் தடுக்கணும்..! இங்க பீகாரி பத்து லட்சம் பேர் குவிஞ்சிட்டா இந்த மண்ணின் மக்களின் அரசியலை அவன் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுவிடும்!

மும்பை தாராவியில் தமிழர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். தேசிய கட்சியின் சார்பில் தமிழர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.. கர்நாடகம் கோலார் பகுதியிலும் இப்படி நடந்தது உண்டு.. 

semaan-Interview-1 (1)

அப்படி இல்ல.. கர்நாடகாவுல ஒரு கோடி தமிழர் வாழறான். ஆனா அவன் கையில ஆட்சி அதிகாரம் இல்லை.. அங்கெல்லாம் தமிழர்கள் ஓ.சி. அதாவது முன்னேறிய வகுப்புன்னு சொல்லி எந்த சலுகையும் தர மறுக்கிறான். ஆனா, இங்கே இட ஒதுக்கீடு இருக்கு… என் மொழியில படின்னு சொன்னா முடியாதுனு வழக்கு போடுறான்.. அவனை எதுத்தா ஓட்டு கிடைக்காதுன்னு இந்த திராவிட கட்சிகள் பயப்படறான்.. நான் இமையம் முழுக்க பரவி வாழ்ந்திருக்கேன்.. இப்போ எப்படி ஒடுங்கி நிக்கறேன் பாருங்க. ஈழத்தில் என்ன நடந்தது? வந்தேறி சிங்களன்.. என்னை அடிக்கிறான்.. நாளைக்கு இங்கேயும் அதானே நடக்கும்? மன்னர் ஆட்சியில ஐநூறு வருசத்தக்கு முன்னால இங்கே நாயக்கர் ஆட்சி நடந்தது. இப்ப மக்களாட்சி காலத்திலும் விஜயகாந்த் ஆளனுமா?

ஓட்டு பயத்தால், திராவிட கட்சிகள் பிற மொழியினரை அனுசரிக்கிறார்கள் என்கிறீர்கள். நீங்களும் தேர்தலில் போட்டியிடப்போகிறீர்கள்.. உங்களுக்கு அந்த ஓட்டு பயம் இல்லையா?

மத்த மொழிக்காரன், தமிழ்நாட்டுல மொத்தமே ஒரு கோடிதான் இருப்பான். சும்மா, இத்தனை கோடி அத்தனை கோடின்னு சும்மா பூச்சாண்டி காட்டுறான். அதுல ஒருத்தன் கூட எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டான்.. நானே அவன் ஓட்டு வேண்டாம்னுதானே சொல்றேன்! அப்புறம் எனக்கென்ன பயம்?

டி.வி.எஸ் சோமு   https://www.facebook.com/reportersomu