அன்புக்கு நயன்… அடக்க நினைத்தால் நீ லயன்!

Must read

nayandara-11

யானா மரியம் குரியன் என்கிற பூர்வாசிரம பெயர் கொண்ட டிஜிட்டல் நாயகி நயன்தாராவுக்கு இன்று 31வது பிறந்தநாள்!.

போன வருச பிறந்தநாள்
போன வருச பிறந்தநாள்

 

“அய்யா” தமிழ்ப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார்.

தொடர்ந்து அஜீத்துடன் பில்லா, விஜய்யுடன் வில்லு, சூர்யாவுடன் ஆதவன், சிம்புவுடன் வல்லவன், தனுஷுடன் யாரடி நீ மோகினி, ஆர்யாவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன், விஷாலுடன் சத்யம், உதயநிதி ஸ்டாலினுடன் இது கதிர்வேலன் காதல், என கிட்டத்தட்ட தமிழின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார்.

அதற்கும் முந்திய பிறந்தநாள்
அதற்கும் முந்திய பிறந்தநாள்

 

வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடனும், வில்லு படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் இயக்குனர் பிரபுதேவாவுடனும் காதல் கொண்டு பின்னர் அவர்களை விட்டு பிரிந்தார். கொஞ்ச இடைவேளைக்குப் பிறகு “நானும் ரவுடிதான்” படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ்சிவனுடன் காதல் கொண்டார்.   இடையே அவர்கள் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் பரவியிது. நயன் வீட்டில் வருமானவரி ரெய்டு நடந்தபோது, அவரது சொத்துக்கள் சில விக்னேஷ்சிவன் பெயருக்கு மாற்றப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். இது குறித்து கேட்டபோது, அவர் என் கணவர் என்று பதில் சொன்னார் நயன்.

நயன்தாரா நடிக்க வந்து 11 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் அவர்தான் நம்பர் ஒன். மிக அதிக சம்பளம் வாங்குபவர். அவரோடு நடிக்க பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் போட்டி போட்டுகிறார்கள்.

 

 

சேலத்தில் கூட்டம்
சேலத்தில் கூட்டம்

குஷ்புவுக்கு கட்டிய மாதிரி இவருக்கு தமிழ் இளைஞர்கள் கோயில் கட்டவில்லையே தவிர, தங்கள் இதயத்தில் இவரைத்தான் குடி வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் சேலத்துக்கு கடை திறப்புக்காக சென்ற நயனை தரிசிக்க ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடிவிட்டார்கள் என்பதே இதற்கு சிறு சாட்சி. அப்போதே, டாக்டர் அன்புமணிக்கு போட்டியாக ” மாற்றம் முன்னேற்றம் நயன்தாரா” என்று இணையத்தில் படங்கள் உலா வர ஆரம்பித்துவிட்டன.

வருங்காலத்தில் அரசியலில் வெற்றிகண்டு பெரும் பதவிகளை அடைந்தாலும் வியப்பதற்கில்லை!

12227080_1096068210411279_1786450119273302447_n

இணையத்திலும் இவரது பிறந்தநாளுக்கு பலரும் “கவிதையாக” எழுதித்தள்ளுகிறார்கள். (அவை கவிதையா என்பது வேறு விசயம்.)

கௌரிசங்கர் என்ற பதிவர் எழுதியிருக்கும் “கவிதை”:

“அன்பானவர்க்குத்தான் நீ நயன்

அடக்க நினைப்போர்க்கு நீ லயன்

சேலத்தைக் கலக்கிய பெண் சிங்கத்துக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்…!”

 

 

 

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article