வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த  வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் நிறுவனம் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம் 98 சதவிகிதம் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா தொற்று காலத்தில் வீட்டில் இருந்தேர படிக்கவும், பணி நிமித்தமாகவும் பணி செய்ய ஜூம் செயலி பெரும் பங்காற்றியது. இதன்  மூலம் மற்றவர்களை பார்க்கவும் அவர்களிடம் பேசவும் முடியும். இந்த ஜூம் தொடங்கி 9 வருடங்கள் ஆகிறது. இந்த பொதுமுடக்கம் காலகட்டத்தில் தான் இதன் பயன்பாடு உலக மக்களின் பார்வையை பெரிதும் கவர்ந்தது. 2021 டிசம்பர் வரை தினசரி சுமார் 10 மில்லியன் பேர் உபயோகித்த ஜூம் இந்த ஏப்ரல் மாத கணக்கின் படி தினசரி சுமார் 300 மில்லியன் பேர் உபயோகித்தனர் என அந்த நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

ஆனால்,  கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது.  இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான் நிறுவனமும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது. இதற்கிடையே, இந்தாண்டு தொடக்கம் முதல் அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் உளப்ட பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து நீக்கி வருகின்றன.  சில நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்து வருகின்றன.

இந்த நிலையில், பிரபல வீடியோ கான்பரன்சிங் செயலியான, ஜூம் நிறுவனம், 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து உள்ளதாக இதன் சி.இ.ஓ., இரிக் யுவான் தெரிவித்தார். இது மொத்த பணியாளர்களிடல்  15 சதவீத பணியாளர்களை என்று தெரிவித்துள்ள   எரிக் யுவான், நீங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பணியாளராக இருந்தால் அடுத்த 30 நிமிடங்களில் ஜூம் நிறுவனத்தால் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள் என்றும், இந்த பணி நீக்கம் குறித்து அமெரிக்கா அல்லாத ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் யுவான் தெரிவித்தார்.