பெர்த்தில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தானை ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து த்ரில் வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டிமஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே அணியில் சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியின் முகமத் வாசிம் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

துவக்கத்தில் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் அணி 13 வது ஓவரில் சரிவை சந்தித்தது ஒரே ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

15 வது ஓவரில் மற்றொரு விக்கெட்டை இழந்த நிலையில் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி மாறி மாறி வந்தது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வாசிம் அடித்த பவுண்டரியை அடுத்து 3 பந்துகளில் 3 ரன்கள் தேவைப் பட்டது.

நான்காவது பந்தில் ரன் எடுத்தும் எடுக்க முடியாத நிலையில் 5வது பந்தில் பிராட்லி நீல் எவன்ஸ் வீசிய பந்தில் முகமத் நவாஸ் அவுட்டானார்.

பாகிஸ்தான் அணி வெற்றிபெற கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப் பட்ட நிலையில் ஷாஹீன் அப்ரிதி இரண்டாவது ரன் ஓடி ஜிம்பாப்வே ஸ்கோரை சமன் செய்ய நினைத்து ரன்னவுட்டானார்.

இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி த்ரில் வெற்றி பெற்றது.

டி20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாக அமைந்தது.