லுசாகா

சாம்பியா நாட்டின் முதல் அதிபர் கென்னத் கவுண்டா தனது 97 ஆம் வயதில் மரணம் அடைந்துள்ளார்.

சாம்பியா நாட்டின் முதல் அதிபராக கென்னத் கவுண்டா கடந்த 1964 முதல் 1991 வரை பதவி வகித்துள்ளார்.   இவர் 1924 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.   இவர் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளைப் பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறக் கடுமையாக போராடி உள்ளார்.  இவர் பள்ளி ஆசிரியராக பணியைத் தொடங்கி அதன் பிறகு அரசியலில் நுழைந்தார்.

 இவர் முதலில் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸில் இருந்தார்.  அதன் பிறகு சாம்பிய ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸைத் துவக்கினார். விடுதலை பெற்ற சாம்பியாவின் முதல் அதிபராக இவர் பதவி வகித்தார்.   இவர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இவர் 1991 ஆம் வருடம் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

கென்னத் கவுண்டா தந்து 97 ஆம் வயதில் மரணம் அடைந்துள்ளார்.  அவரது மரணத்தை தற்போதைய சாம்பியா அதிபர் சமூக வலைத் தளங்களில் தெரிவித்துள்ளார். அவரது மகனும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.