சென்னை: முன்னாள் திமுக நிர்வாகியாக ஜாபர் சாதிக், மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் இதுதொடர்பான தகவல்கள் இருந்தாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜாபர் சாதிக் வீட்டில், மேலும் சில ஆவணங்கள் சிக்கின. அவற்றை ஆய்வு செய்தபோது, பல்வேறு மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு ஜாபர் சாதிக், லட்சக்கணக்கில் பணம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். முன்னதாக, பிப்ரவரி 15ம் என்.சி.பி.அதிகாரிகள் டெல்லியில் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, விசாரணையின்போது, இந்த போதை பொருட்கள், உணவு பொருட்களுடன் கலந்து, துபாய், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஜாபர் சாதிக் கடத்தியது என்.சி.பி. விசாரணையில் அம்பலமானது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழ் சினிமா தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் முஜிபூர், முகேஷ், அசோக் குமார் மற்றும் ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளி சதானந்தம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக், கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் ஏப்ரல் 10ந்தேதி அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை பெரம்பூரில் யுகேஷ், முகேஷ், லலித்குமார் என்ற கெமிக்கல் நிறுவனம் நடத்தி வரும் சகோதரர்களிடம் நடத்தப்பட்டு வந்த சோதனை நிறைவடைந்தது. இதேபோல் கொடுங்கையூரில் சினிமா துறையைச் சேர்ந்த ரகு என்பவர் வீட்டில் நடந்த சோதன நடத்தப்பட்டது. மேலும், தேனாம்பேட்டையில் ஃபசீரா டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் நிறுவனம், அடையாறில் புகாரி ஹோட்டல் உரிமையாளர் சி.எம்.புஹாரி வீட்டில் நடந்து வந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும், கீழ்பாக்கத்தில் உள்ள ஷேக் முகமது நிசார் என்பவர் வீட்டிலும், தி.நகரில் உள்ள அமீர் வீடு மற்றும் சேத்துபட்டில் உள்ள அமீரின் உறவினர்கள் வீட்டிலும் நடந்து வந்த சோதனை நடத்தப்பட்டது.
மேலும், விசாரணையில் ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தலில் ஈட்டிய வருமானத்தை திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் அரசியல் கட்சிக்கு நிதி வழங்கியதாக என்.சி.பி. விசாரணையில் தெரிய வந்தது. அதேபோல், ஜாபர் சாதிக் உடன் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் திரைத்துறையினர் யார் யாரெல்லாம் நெருங்கிய தொடர்பில் இருந்தார்களோ விரைவில் விசாரணை வளையத்திற்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் அமீர் விசாரணைக்கு நேரில் ஆஜராக என்.சி.பி. சம்மன் அனுப்பியது. அவரிடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தியதில் ஜாபர் சாதிக்கின் தொழில் மற்றும் பணப்பரிவர்த்தனை குறித்து என்.சி.பி அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியானது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஜாபர் சாதிக் ஈடுபட்டிருக்கலாம் என அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. இதுவரை ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்களை அமலாக்கத்துறை ஏப்ரல் 25ந்தேதி அன்று வெளியிட்டுள்ளது. அதில், ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் 40 கோடி ரூபாயை ரியல் எஸ்டேட், மருத்துவமனை மற்றும் திரைத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளதாகவும், அதாவது ரூ.6 கோடி நேரடியாகவும், ரூ.12 கோடி மறைமுகமாகவும் திரைத்துறையில் முதலீடு செய்துள்ளதாகவும், பல அசையா சொத்துகள் வாங்கியுள்ளதாகவும்,தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, ஜாபர் சாதிக் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் திரைப்பட இயக்குனர் அமீர், புஹாரி ஓட்டல் அதிபர் இர்பான் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதில், 40 கோடி ரூபாய் வரை சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஜாபர் சாதிக் வீட்டில் நடத்திய சோதனையின்போது, சில ஆவணங்கள் சிக்கின. அவற்றை ஆய்வு செய்தபோது, பல்வேறு மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு ஜாபர் சாதிக் போதைப்பொருள் மற்றும் , லட்சக்கணக்கில் பணம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள், சென்னையில் தங்கி படிக்கும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை குறிவைத்து, போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு புரோக்கர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சங்கங்களின் நிர்வாகிகள் செயல்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளன’ என்று தெரிவித்து உள்ளனர்.
போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள்! டிஜிபி சங்கர் ஜிவால் ஓப்பன் டாக்…
ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல்: முதலமைச்சர் அமைதியாக இருப்பது குறித்து அண்ணாமலை கேள்வி….