சேலம்:
கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான கோகுல்ராஜ். கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். இவரது மர்ம சாவு சர்ச்சைக்குள்ளானது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த சுவாதி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த மாணவியைக் காதலித்ததால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

கோகுல்ராஜை, சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர், திட்டமிட்டு ஆணவக்கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டு விட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், 2022பிப்ரவரி மாதம் 9ந்தேதி ம் இறுதி விசாரணை நடைபெற்றது. குற்றம் சாட்டப் பட்ட யுவராஜ் உள்பட வழக்கு தொடர்புடைய அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிவடைந்ததால் இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற மார்ச் 5- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சம்பத்குமார் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று இன்று மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த ஆணவ கொலை வழக்கில் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட் 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்யவில்லை என்ற குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாதிட்ட நிலையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.