உலகிலேயே பணக்கார மலையாளி யூசுப் அலி: சொத்து மதிப்பு 4.8 பில்லியன் டாலர்

Must read

திருவனந்தபுரம்:

உலகத்திலேயே பணக்கார மலையாளி லூலூ குரூப் எம்ஏ யூசுப் அலி என போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.


உலக அளவிலான பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள போப்ஸ் கூறியிருப்பதாவது:

லூலூ குரூப் தலைவர் யூசுப் அலிக்கு கேரள மாநிலம் திருச்சூர் சொந்த ஊர்.  மத்திய கிழக்கு நாடுகளின் வர்த்தக ராஜாவாக கருதப்படும் இவருக்கு 4.8 பில்லியன் டாலர் சொத்துகள் உள்ளன.

உலக பணக்காரர்களில் 394-வது இடத்தில் இவர் இருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டில் உலகிலேயே 26&வது இந்திய பணக்காரர் வரிசையில் இருந்தார்.

கடந்த 1973-ம் ஆண்டு 16 வயதில் துபாய் சென்று தன் உறவினரோடு வர்த்தகம் செய்தார். 1990-ல் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்ட இவருக்கு தொடர்ந்து ஏறுமுகம்தான்.

2016-ம் ஆண்டு ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் ஸ்டேஷனை வாங்கி, அதே இடத்தில் 170 மில்லியன் டாலரில் சொகுசு ஓட்டலை கட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article