புதுடெல்லி:

கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானில் கடும் வெப்பக் காற்றால் இறந்தோரின் படத்தை, இந்திய விமானப் படை தாக்குதலில் இறந்த தீவிரவாதிகள் என சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.


இது குறித்து ஆல்ட் நியூஸ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்க முகாம் தரைமட்டமானது.

இதில் எவ்வளவு பேர் இறந்தனர் என்பது குறித்து தெரிவிக்குமாறு எதிர்கட்சிகள் கோரி வருகின்றன.

இந்நிலையில், சமூகவளைதளங்களில் 358 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக படங்களுடன் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இது பொய் செய்தி என்று தெரியவந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ஜுன் 26-ம் தேதி பாகிஸ்தான் கராச்சியில் கடும் வெப்பக் காற்றுக்கு 50 பேர் பலியானார்கள்.

இவர்களது உடலுக்கு யாரும் உரிமை கோரவில்லை. அதனால், பாகிஸ்தான் எதி அறக்கட்டளை தன்னார்வலர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைத்தனர்.

இந்தப் படங்களை எடுத்து, விமானத் தாக்குதலில் இறந்த தீவிரவாதிகள் என பொய் பிரச்சாரம் செய்துள்ளனர் என அந்த கட்டுரையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.