டெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி,.ஒய்எஸ் ஷர்மிளா தனது ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியுடன் அதிரடியாக காங்கிரசில் இணைந்துள்ளார். இது ஆந்திர மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்எஸ் ஷர்மிளா தனது கட்சியுடன் இன்று டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். இவர் தெலுங்கான சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து, அங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க காரணமாக அமைந்த ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்எஸ் ஷர்மிளா இன்று டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
இதுகுறித்து கூறிய ஷர்மிளா, “மிக விரைவில், லோக்சபா தேர்தலுக்கான திட்ட வரைவு) உருவாக்கப்படும்” என்று கூறினார்.
முன்னதாக நேற்று இரவு தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் டெல்லி சென்றிருந்த ஷர்மிளா செய்தியாளர்களை சந்தித்தபோது, காங்கிரஸில் இணைய உள்ளீர்களா என்ற கேள்விக்கு, ‘ஆம், அது போலதான் இருக்கிறது’ என்று கூறினார். அதைத்தொடர்ந்து, , இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சென்ற நிலையில், காலை காலை 11 மணியளவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி முன்னிலையிலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அத்துடன், தனது ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியையும் காங்கிரசில் இணைத்தார்.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக, அவரது சகோதரி, ஷர்மிளா காங்கிரஸில் இணைந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி இன்று திடீரென தெலுங்கானா சென்று, அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான கே.சி.ஆரை சந்தித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அங்கு தேர்தல் ஜூரம் தீவிரமடைந்துள்ளது. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஜெகன்மோகனும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தது ஆந்திர மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸில் இணைந்தால், ஒய்எஸ் ஷர்மிளாவுக்கு தேசிய அளவில் கட்சியில் ஏதாவது பதவி வழங்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸுடன் அவரது கட்சி இணைந்த பிறகு, தென் மாநில தேர்தல் பொறுப்பாளராக சர்மிளா நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அபார பெரும்பான்மையுடன் ஜெகன்மோகன் வெற்றி பெற்றபோது, தனக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாததால் ஷர்மிளா கடும் அதிருப்தியில் இருந்த ஷர்மிளா தனத சகோதரர் மீது சொத்து தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் கூறியிருந்தார். இதனால், அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகமானதால், சகோதரரை எதிர்த்து அரசியல் செய்ய தொடங்கினார். அதன் காரணமாக தனிக்கட்சி தொடங்கி அவ்வப்போது போராட்டங்களை நடத்தி மக்களின் மதிப்பெற்று வந்தார். இந்த நிலையில்தான், தற்போது தனது சகோதரனுக்கு எதிராக களத்தில் நிற்கும் வகையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
Photo and Video: Tanks ANI