
சென்னை:
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொலை வழக்கில் இளைஞருக்கு, சென்னை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ரேஸ் கோர்சில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருணா. அங்கு பணிபுரிந்துவந்த ஊழியர் சோலைமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்ப்டடதால் அவரை , பணியில் இருந்து அருணா நீக்கினார். இதனால் ஆத்திரமடைந்த சோலைமலை, கடந்த 2013 ஆம் வருடம், அருணாவை, பலர் முன்னிலையில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
இந்த கொலை வழக்கு சென்னை மகிளா அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. விசாரணை முழுமையாக முடிவடைந்து சோலைமலைக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
[youtube-feed feed=1]