வனியாபுரம்

நேற்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று அவனியாபுரத்தில் நட்ந்த ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளுடன் நிறைவடைந்தது.  நேற்று காலை 6.30 மணிக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியதில் இருந்தே, மாடு பிடி வீரர்கள், திமிறி வரும் காளைகளின் திமிலை பிடித்து அடக்கி வந்தனர்.

ஒரு சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. ஒருசில காளைகள் வீரர்களை முட்டி தாக்கியதில் காயமடைந்த வீரர்கள் உடனடியாக வெளியே  நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மஞ்சள், இளஞ்சிவப்பு, நீல நிறம் அணிந்த வீரர்கள் சுற்றுக்கு தலா 50 பேர் வீதம் களம் கண்டனர்.

இதில்10 சுற்றுகள் முடிந்த பிறகு, அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை வகித்த 30 பேர் வீர்ரகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த \ஜல்லிக்கட்டுப் போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்திக் முதலிடம் பெற்றுள்ளார். 15 காளைகளை அடக்கி குன்னத்தூர் அரவிந்த் திவாகர் இரண்டாம் இடமும், 14 காளைகளை அடக்கி திப்புவனம் முரளிதரன் மூன்றாம் இடமும் பிடித்தனர்

தமிழக முதல்வர், துணை முதல்வர் சார்பில் இந்த ஆண்டு பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு  அளிக்கப்படுகிறது. 19 காளைகளை அடக்கி முதல் பரிசான ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள நிசான் காரை திருப்பரங்குன்றம் கார்த்திக் பெற்றுக்கொண்டார். மேலும் கன்றுடன் கூடிய பசுவும் அவருக்கு வழங்கப்பட்டன. 15 காளைகளை அடக்கிய குன்னத்தூர் அரவிந்த் திவாகருக்கு இரண்டாம் பரிசான இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

முதல் பரிசாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசை வி.கே.சசிகலாவின் காளை வென்றது. இதை காளை வளர்ப்பாளர் மலையாண்டி பரிசுகளை பெற்றுக் கொண்டார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் சார்பில் பசுவும் கன்றும் பரிசாக அளிக்கப்பட்டது. முன்னதாக ஜல்லிகட்டில் சசிகலாவின் காளை பங்கேற்ற நிலையில், வீரர்கள் சூழந்து நின்றபோதும் கம்பீரமாக நின்று வேட்டையாடிய காளையை மாடுபிடி வீரர்கள் ஒருவரால் கூட பிடிக்கமுடியவில்லை.