சேலம்; மக்கள் கூட்டமாக காணப்பட்ட  நேரத்தில் இன்று காலை,  சேல பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறி உள்ளது. மாணவியை கத்தியால் குத்திய மாணவன், தனது கையையும் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி உள்ளார். படுகாயமடைந்த கல்லூரி மாணவியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தியால் குத்திய மோகன பிரியன் என்ற இளைஞர் கத்தியால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் இந்த சம்பவம் அங்கிருந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சேலம் போஸ் மைதானத்தில் பழைய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை வழக்கம்போல பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளும், பெரியவர்கள் தங்களுக்கான பணிகளுக்கும் பேருந்துகளை பிடித்து பயணம் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த கல்லூரி மாணவி ஒருவரை, அவருடன் வந்த இளைஞர் ஒருவர் திடீரென கத்தியால் குத்திய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலர் சத்தமிட்ட நிலையில், மாணவியை கத்தியால் குத்திய மோகன் பிரியவன் என்ற வாலிபர், தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.

இதுகுறித்து உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் இவர்களை உடடினயாக தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில்,  இருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட காதலால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.